பல்வேறு ஆடம்பர வசதிகளுடன் பாதுகாப்பான எஸ்யூவி காராக வால்வோ எக்ஸ்சி 90 எக்ஸ்லன்ஸ் லான்ஞ் கன்சோல் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு ரூபாய் 1.42 கோடியில் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் முதன்முறையாக இந்திய சந்தையில் இந்த மாடல் 3 இருக்கைகள் மட்டும் பெற்ற மாடலாக வெளிவந்துள்ளது.
வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ள வால்வோ XC90 எஸ்யூவியின் எக்ஸ்லென்ஸ் லான்ஞ் கன்சோல் மாடலில் டி8 ட்வீன் ஹைபிரிட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 320 ஹெச்பி, 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட மற்றும் சூப்பர்சார்ஜ்டு பெற்ற பெட்ரோல் என்ஜின் உடன் கூடுதலாக 87 ஹெச்பி எலக்ட்ரிக் மோட்டருடன் எஸ்யூவிக்கு மொத்தமாக 407 ஹெச்பி பவர் மற்றும் 640 என்எம் முறுக்குவிசை ஒருங்கிணைந்து வழங்குகின்றது. இதில் ஆல் வீல் டிரைவ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் மூன்று இருக்கை லேஅவுட் வழங்கப்பட்டுள்ளது. இதில் 17 அங்குல தொடுதிரை அம்சத்துடன் கூடிய பல்வேறு வசதிகளை வழங்கும் திரை உள்ளது. பல்வேறு உயர்தரமான சொகுசு வசதிகளை கொண்டுள்ள இந்த காரில் குளிர்சாதன பெட்டி, குளிர்விக்க மற்றும் சூடுபடுத்துவதற்கான கப் ஹோல்டர்கள், உயர்தரமான லெதர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரின் இன்டிரியரில் 20 ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.