சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய எஸ்யூ7 எலக்ட்ரிக் செடான் மாடல் ஆனது பிரசத்தி பெற்ற டெஸ்லா மாடல் 3 காருக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
பேட்டரி திறன் மற்றும் ரேஞ்ச் தொடர்பான தகவல்களை வெளியிடவில்லை. ஆனால் இரண்டு விதமான பவரை வழங்கும் பேட்டரி மற்றும் மோட்டார் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Xiaomi SU7
புதிய எஸ்யூ7 எலக்ட்ரிக் செடானில் BYD நிறுவனத்தின் லித்தியம் ஐயன் பாஸ்பேட் (LFP) பேட்டரி ஆனது பெறப்பட்டு ரியர் வீல் டிரைவ் கொண்ட மாடல் 299 hp பவர் மற்றும் டாப் ஸ்பீடு மணிக்கு 210 கிமீ ஆகவும், ஆல் வீல் டிரைவ் பெற்ற டாப் வேரியண்ட் 673 hp பவர் மற்றும் டாப் ஸ்பீடு மணிக்கு 265 கிமீ ஆக விளங்கும் என குறிப்பிட்டுள்ளது.
மிக நேர்த்தியான ஸ்போர்ட்டிவ் வடிவமைப்பினை கொண்டுள்ள சியோமி SU7 காரின் 19 அல்லது 20 அங்குல வீல் கொடுக்கபட்டுள்ளது. மிக ஸ்டைலிஷான எல்இடி ஹெட்லைட் அம்சத்துடன் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்ட மாடலுக்கு ஏற்ற LIDAR பெற உள்ளது.
சியோமி நிறுவனம் கார்களை தயாரிக்க BAIC மூலம் ஒப்பந்தத்தின் கீழ் தயாரித்து விற்பனைக்கு 2025-ல் கொண்டு வரவுள்ளது.