125சிசி பிரிவில் முன்னனி வகித்து வந்த ஹோண்டா தற்பொழுது ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனத்திடம் சந்தைய இழக்க தொடங்கியுள்ளது. ஹீரோ கிளாமர் கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் 66,756 பைக்குகள் விற்பனை ஆகியுள்ளது.
தொடக்கநிலை சந்தையான 100 முதல் 125சிசி வரையிலான பிரிவில் ஹீரோ மோட்டோகார்ப் சமீபகாலமாக சிறப்பான வளர்ச்சியினை பெற்றுவருகின்றது. கடந்த சில வருடங்களாக 125சிசி பிரிவில் முதன்மை வகித்துவந்த ஹோண்டா சிபி ஷைன் ,புதிய சிபி ஷைன் எஸ்பி மற்றும் சிபி ஸ்ட்டனர் ( 2014யின் இறுதியில் நிறுத்தப்பட்டது ) போன்ற மாடல்களின் விற்பனை வலுவிழந்து வருகின்றது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கிளாமர் ,இக்னைட்டர் மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் போன்ற மாடல்கள் நல்ல விற்பனை எண்ணிக்கையை கடந்த சில மாதங்களாக தந்துவருகின்றன.
கடந்த வருட ஏப்ரல் 2015யில் 74,532 பைக்குகள் விற்பனை செய்திருந்த ஹோண்டா கடந்த மாத ஏப்ரல் 2016யில் 66,700 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதே காலத்தில் ஹீரோ மோட்டோகார்ப் கடந்த ஏப்ரல் 2014யில் 82,298 பைக்குகளை விற்பனை செய்திருந்த ஹீரோ ஏப்ரல் 2016யில் 1,09,955 பைக்குகளை விற்பனை செய்து 33 சதவீத வளர்ச்சியினை பெற்றுள்ளது.
கடந்த ஏப்ரல் 2015யில் ஹோண்டா சிபி ஷைன் பைக் 73,291 விற்பனை ஆகியிருந்தது. அதே காலத்தில் கிளாமர் 51,829 பைக்குகள் விற்பனை ஆகியிருந்தது. தற்பொழுது கடந்த ஏப்ரல் 2016யில் ஹோண்டா சிபி ஷைன் பைக் 52,752 விற்பனை ஆகியுள்ளது. அதே காலத்தில் கிளாமர் 66,756 பைக்குகள் விற்பனை ஆகியுள்ளது.
வரும் 2018 ஆம் நிதி ஆண்டுக்குள் 1 மில்லியன் ஹீரோ கிளாமர் பைக்குகளை விற்பனை செய்ய ஹீரோ திட்டமிட்டுள்ளது.