ரூ.3,000 கட்டணத்தில் வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் வெளியிடப்பட்டுள்ள நிலையில் கடந்த நான்கு நாட்களில் நாடு முழுவதும் 500,000 பயனாளர்களை கடக்க முக்கிய காரணம் டோல்கேட்களை வெறும் 15 ரூபாய் கட்டணத்தில் கடக்கலாம் என்பதே இந்த திட்டத்திற்கு அமோக வரவேற்பு பெற்றுள்ளது.
ரூ.3000 கட்டண்த்தில் சுமார் 200 டோல்கேட்களை கடக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு அட்டை குறைந்த கட்டணத்தில் சாத்தியப்படுத்தப்படுகின்றது.
தமிழ்நாடு அதிக எண்ணிக்கையிலான வருடாந்திர பாஸ் திட்டத்தை பதிவு செய்துள்ளனர், அதைத் தொடர்ந்து கர்நாடகா மற்றும் ஹரியானா உள்ளன. வருடாந்திர பாஸைப் பயன்படுத்தும் டோல் பிளாசா பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகியவை அதிக எண்ணிக்கையிலானவற்றைப் பதிவு செய்துள்ளன.
அதே நேரத்தில், ராஜ்மார்க்யாத்ரா ஆப் (Rajmargyatra app) கூகிள் பிளே ஸ்டோரில் ஒட்டுமொத்த தரவரிசையில் 23 வது இடத்தைப் பிடித்துள்ளது மற்றும் பயணங்கள் பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
15 லட்சத்துக்கு அதிகமான பதிவிறக்கங்கள் மற்றும் 4.5 நட்சத்திர மதிப்பீட்டைக் கொண்டு, வருடாந்திர பாஸ் அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு நாட்களுக்குள் பெற்றுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் உள்ள சுமார் 1,150 சுங்கச்சாவடிகளில் இந்த பாஸ் செல்லுபடியாகும், மேலும் இதை ராஜ்மார்க்யாத்ரா செயலி அல்லது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வலைத்தளம் மூலம் வாங்கலாம். வாங்கிய இரண்டு மணி நேரத்தில் அட்டை செயல்பாட்டுக்கு வரும்.