டிசம்பர் 1 முதல், 4 சக்கர வாகனங்களில் ஃபாஸ்டேக் கட்டாயம்

0

FASTag nhaiநாட்டிலுள்ள 364 சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் எனும் நவீன நுட்பத்தினால் சுங்க கட்டணம் செலுத்துவதற்கான முறையை டிசம்பர் 1 முதல் விற்பனை செய்யப்படுகின்ற புதிய 4 சக்கர வாகனங்களில் கட்டாயமாக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஃபாஸ்டேக்

FASTag

Google News

ஃபாஸ்டேக் எனும் மின்னணு முறையிலான பண பரிமாற்ற அட்டை வானொலி அலைகள் ((RFID) வாயிலாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். இந்த அட்டை வாகனத்தின் விண்ட்ஷீல்டு கண்ணாடியில் ஒட்டப்பட்டிருக்கும், இதனை சுங்கச் சாவடிகளில் அமைந்திருக்கும் சென்சார்கள் ஸ்கேன் செய்து கட்டணத்தை பெற்றுக் கொள்ளும்.

வாகன நெரிசல் மிகுந்த நேரங்களில் சுங்கச் சாவடிகளில் அதிகப்படியான நேரம் காத்திருக்க வேண்டிய நிலையை தவிர்பதற்கான நடவடிக்கையாக கருதப்படுகின்றது.

ஃபாஸ்டேக் பெறுவது எவ்வாறு ?

ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை பெறுவதற்கு ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சிறப்பு ஃபாஸ்டேக் மையங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த மையங்களில் கீழே வழங்கப்பட்டுள்ள ஆவனங்களை கொண்டு இந்த அட்டையை பெறலாம்.

  • வாகன பதிவுச் சான்றிதழ்
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று
  • KYC டாக்குமென்ட் – இவற்றில் ஏதேனும் ஒன்று , ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் கார்டு.
  • வங்கி கணக்கு எண்  (இணைப்பு பெற்ற ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, சிண்டிகேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐடிஎஃப்சி வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பேடிஎம் )

மேலே வழங்கப்பட்டுள்ள ஆவனங்களில் ஒரிஜனல் கொண்டு சென்று இந்த சிறப்பு சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தும் அட்டையை பெற்றுக் கொண்டு அதனை முன்புற கண்ணாடியில் ஸ்டிக்கரிங் செய்து கொண்டால் போதுமானதாகும்.

ஃபாஸ்டேக் அட்டைகளை ரீசார்ஜ் செய்து கொள்ள கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, NEFT/ RTGS அல்லது நெட்பேங்கிங் கொண்டு ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.1,00,000 வரை ரீசார்ஜ் செய்யும் வகையிலான வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த அட்டைக்கு என செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப பெற இயலாது, மேலும் ஒரு வாகனத்திற்கு செலுத்தப்பட்ட கட்டணத்தை மற்ற வாகனங்களுக்கு பயன்படுத்த இயலாது.