ஃபாஸ்டாக் கட்டாய நடைமுறை டிசம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

fastag

சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டாக் டிசம்பர் 1 முதல் கட்டாயம் என்ற நடைமுறையை தற்போது டிசம்பர் 15 ஆம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளது. விரைவாக சுங்க கட்டணத்தை செலுத்த டிஜிட்டல் முறையிலான இத நடைமுறை மிக வேகமான செயற்பாட்டை வழங்க உதவுகின்றது.

அதிகரிக்கும் வாகன நெரிசலை எளிதாக்குவதற்கும் கண்காணிப்பதற்கும், கட்டண பிளாசாவில் உள்ள ஒரு வழிப்பாதை விதிமுறைகளின் படி ஃபாஸ்டாக் முறையை செயற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முன்னதாக, சுங்கசாவடிகளில் உள்ள அனைத்து பாதைகளும் 2019 டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் ‘ஃபாஸ்டாக் லேன்’ மாற்றப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது இதற்கான கால அவகாசம் டிசம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

FASTag என்பது ஒரு காந்த துண்டு கொண்ட ஸ்டிக்கர் போன்றதாகும். இதில் ரேடியோ அதிர்வெண் அடையாளத்தை (Radio Frequency Identification – RFID) பயன்படுத்தும் வாகனத்தின் விண்ட்ஸ்கிரீனின் மேல் இடது மூலையில் இருக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலை டோல் பிளாசாக்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கிளைகளில் பாயிண்ட்-ஆஃப்-சேல் (பிஓஎஸ்) போன்ற பல்வேறு சேனல்கள் வழியாக இந்தியாவில் 22 சான்றளிக்கப்பட்ட வங்கிகளால் ஃபாஸ்டேக்குகள் வழங்கப்படுகின்றன. இது தவிர, அமேசான் பேடிஎம் போன்ற இ-காமர்ஸ் தளத்திலும் இது கிடைக்கிறது.

ஃபாஸ்டாக் அட்டை வழங்க ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ், கோடாக் போன்ற வங்கிகளும் எந்தவித கட்டணமும் பெறக்கூடாது என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.