Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஒரே நாளில் 3 லட்சம் பைக்குகளை விற்பனை செய்த ஹீரோ – தந்தேரஸ்

by automobiletamilan
October 20, 2017
in வணிகம்

உலகின் முன்னணி மோட்டார்சைக்கிள் தயாரப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் தந்தேரஸ் எனப்படும் தீபாவளிக்கு முந்தைய நாளில் மட்டும் 3 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து புதிய சாதனையை படைத்துள்ளது.

3 லட்சம் பைக்குகள்

இந்தியாவின் முதன்மையான மோட்டார்சைக்கிள் நிறுவனம் என்ற பெருமைக்குரிய ஹீரோ மோட்டோகார்ப் எந்தவொரு நிறுவனமும் நிகழ்த்த இயலாத புதியதோர் சாதனையை படைத்துள்ளது. ஒரே நாளில் மொத்தம் 3 லட்சம் இருச்சகர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த மாதந்திர நிலவரப்படி இந்நிறுவனம் 7 லட்சம் பைக்குகள் மற்றும் ஸ்கட்டர்களை விற்பனை செய்து சாதனை படைத்திருந்த நிலையில், மேலும் முதன்முறையாக 2017-18 நிதி ஆண்டின் இரண்டாவது காலண்டில் 20  லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது என்பதும் இங்கே குறிப்பிடதக்கதாகும்.

தந்தேரஸ்

இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பெரும்பாலான வடஇந்திய பகுதிகளில் 5 நாட்களாக கொண்டப்பட்டு வரும் நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாள் தந்தேரஸ் (Dhanteras) என குறிப்பிடுகிறார்கள்.

இந்துக்களில் நம்பிக்கைப்படி தீபாவளிக்கு முந்தைய நாளில் கொண்டாடப்படுகின்ற தந்தேரஸ் எனப்படும் நாளில் தங்கம், வெள்ளி, பித்தளை, இரும்பு அல்லது தாமிரம் எதேனும் ஒரு பொருட்களில் முதலீடு செய்தால் செல்வச் செழிப்பை வருடம் முழுவதும் பெறலாம் என்பது நம்பிக்கையாகும்.

Tags: Dhanterashero bikesHero MotoCorpதந்தேரஸ்ஹீரோ பைக்ஹீரோ மோட்டோகார்ப்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version