மஹிந்திரா ஆட்டோமொபைல் பிரிவு நிறுவனம் சீரான வளர்ச்சி பெற்ற 2018-19 ஆம் நிதி ஆண்டில் 11 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2018-19 ஆம் நிதி வருடத்தில் மொத்தமாக 608,596 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இந்நிறுவனத்தின் யூட்டிலிட்டி ரக வாகனங்கள் முதல் வர்த்தக வாகனங்கள் வரை (டிராக்டர் பிரிவு தவிர) மொத்தமாக நடந்து முடிந்த நிதி வருடத்தில் 608,596 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 549,153 யூனிட்டுகளை விற்பனை செய்திருந்தது.
மஹிந்திரா விற்பனை நிலவரம் FY2018-19
இந்நிறுவனம் மாரச் மாதந்திர விற்பனையில் நடுத்தர மற்றும் கனரக வரத்தக வாகன பிரிவில் 33 சதவீத விற்பனை சரிவினை முந்தைய ஆண்டின் மார்ச் மாதத்துடன் ஒப்பீடுகையில் பெற்றுள்ளது.
பயணிகள் வாகன மாதந்திர விற்பனையில் மஹிந்திரா நிறுவனம், 4 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த மார்ச் 2019-ல் 27,646 வாகனங்களை விற்றுள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 26,555 வாகனங்களை விற்றிருந்தது.
மஹிந்திரா நிறுவனத்தின் 2018-19 நிதி ஆண்டின் மொத்த ஏற்றுமதி 37 சதவீதம் அதிகரித்துள்ளது. நடந்து முடிந்த நிதி ஆண்டில் 38,595 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
விற்பனை நிலவரம் குறித்து மஹிந்திரா ஆட்டோமொபைல் பிரிவு தலைவர் ராஜன் வதேந்தரா கூறுகையில், ஒட்டுமொத்த நிதி ஆண்டின் வளர்ச்சி 11 சதவீத இரட்டை இலக்கை பெற்றுள்ளது. எங்களுடைய மூன்று புதிய தயாரிப்புகள் சிறப்பான வரவேற்பினை பெற்றிருப்பதுடன், இந்திய ஆட்டோமொபைல் சந்தை 2018-19 ஆம் நிதி வருடத்தில் சாதகமான சூழ்நிலையை அமைத்து தந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.