2020 ஜனவரி முதல் மாருதி சுசுகி கார் விலை உயருகின்றது

maruti-suzuki-s-presso

2020 ஜனவரி முதல் மாருதி சுசுகி நிறுவனம் தனது கார்களின் விலை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்வினால் விலை உயர்த்த உள்ளது. ஆனால், எவ்வளவு விலை உயர்த்துவதாக தற்போது வரை குறிப்பிடவில்லை.

இந்தியாவில் தற்போது, மாருதி சுசுகி கார் நிறுவனம் சிறிய ரக கார் ஆல்டோ முதல் பிரீமியம் எம்பிவி எக்ஸ்எல் 6 வரையிலான வாகனங்களை ரூ. 2.89 லட்சம் முதல் ரூ. 11.47 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விற்பனை செய்கிறது.

மிக கடுமையான விற்பனை சரிவை ஆட்டோமொபைல் துறை சந்தித்து வருகின்ற நிலையில் விலை உயர்வு என்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. மாருதி மட்டுமல்ல பல்வேறு முன்னணி தயாரிப்பாளர்களும் விலையை உயர்த்த உள்ளனர்.

பிஎஸ்6 வாகனங்களை விற்பனை செய்வதில் மாருதி சுசுகி முன்னிலை வகிக்கின்றது. தனது ஒட்டுமொத்த மாதந்திர விற்பனையில் 70 % வாகனங்களின் எண்ணிக்கை பிஎஸ்6 வாகனங்களாக இந்நிறுவனம் கொண்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *