Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

அக்டோபரில் 3,536 ஹெக்டர் எஸ்யூவி கார்களை விற்ற எம்ஜி மோட்டார்

by automobiletamilan
November 1, 2019
in வணிகம்

MG Hector SUV

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டர் எஸ்யூவி விற்பனை படிப்படியாக உயர்ந்து வருகின்றது. இந்நிறுவனம் 42,000 க்கு அதிகமான புக்கிங்கை பெற்றுள்ள இந்த காரின் உற்பத்தியை படிப்படியாக இந்நிறுவனம் அதிகரித்து வருகின்றது. கடந்த ஜூலை 1508 யூனிட்டுகளும், ஆகஸ்ட் மாதம் 2018 யூனிட்டுகளும், செப்டம்பர் 2608 யூனிட்டுகளும் பதிவு செய்துள்ளது.

விற்பனை செயல்திறன் குறித்து எம்ஜி மோட்டார் இந்தியாவின் விற்பனை இயக்குனர் ராகேஷ் சிதானா கூறுகையில், “எம்ஜி ஹெக்டர் தனது பிரிவில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தி வருகின்றது. எங்கள் வாடிக்கையாளர்களின் இதயங்களை வென்றுள்ளது. நாங்கள் படிப்படியாக எங்கள் உற்பத்தியை அதிகரிக்கும்போது, சரியான நேரத்தில் வாகன விநியோகங்கள் மூலம் மிக உயர்ந்த வாடிக்கையாளர் திருப்தியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். ” என குறிப்பிட்டுள்ளார்.

ஹெக்டர் என்ஜின் விபரம்

143 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் உள்ளது. கூடுதலாக வழங்கப்பட்டுள்ள 48 வோல்ட் ஹைபிரிட் சிஸ்டம் பெற்ற மாடல் 12 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான வேகத்தில் 20Nm இழுவைத்திறன் வழங்குகின்றது.

2.0 லிட்டர் டர்போ டீசல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்ட ஹெக்டர் டீசல் மாடல் 170hp குதிரைத்திறன் மற்றும் 350 Nm இழுவைத்திறன் உடன் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக உள்ளது.

ஹெக்டர் எஸ்யுவி பெட்ரோல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 14.16 கிமீ (மேனுவல்), ஆட்டோமேட்டிக் மாடல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 13.96 கிமீ மற்றும் பெட்ரோல் ஹைபிரிட் வேரியன்ட் மைலேஜ் லிட்டருக்கு 15.91 கிமீ ஆகும்.

எம்ஜி மோட்டாரின் ஹெக்டர் டீசல் மாடல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 17.41 கிமீ ஆகும்.

mg hector engine specs

எம்ஜி ஹெக்டர் விலை பட்டியல்

mg-hector-suv-new-price-list

Tags: MG HectorMG Motor
Previous Post

மஹிந்திரா கார், வரத்தக வாகன விற்பனை 11 % வீழ்ச்சி – அக்டோபர் 2019

Next Post

6 % வீழ்ச்சி அடைந்த டொயோட்டா கார் விற்பனை நிலவரம் – அக்டோபர் 2019

Next Post

6 % வீழ்ச்சி அடைந்த டொயோட்டா கார் விற்பனை நிலவரம் - அக்டோபர் 2019

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version