இந்திய இளைஞர்களின் ரேசிங் ஸ்போர்ட்ஸ் மாடலாக விளங்கி வருகின்ற பஜாஜ் பல்சர் பைக் வரிசை மாடல்களின் முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட பஜாஜ் பல்சர் பைக்குகள் பிஎஸ் 6 எஞ்சினுடன் 2019 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.
2020 பஜாஜ் பல்சர் வரிசை
2001 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்படுகின்ற பல்சர் வரிசை பைக்குகள் தொடர்ந்து முன்னணி மாடலாக விளங்கி வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் புதுப்பிக்கப்பட்ட UG5 பல்சர் 150 பைக் மாடல் வெளியாக உள்ள நிலையில், பாரத் ஸ்டேஜ் 6 மாசு விதிகளுக்கு உட்பட்ட UG6 பல்சர் பைக் வரிசை 150சிசி முதல் 250சிசி வரையிலான திறனில் உருவாக்கும் பணியில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் செயற்படுத்த தொடங்கியுள்ளதாக ஆட்டோகார் இந்தியா தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது 2-வால்வு, DTS-i எஞ்சின் மாடலுக்கு மாற்றாக 4 வால்வுகளை கொண்ட என்ஜின்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட தொடங்கியுள்ள நிலையில் 150சிசி போன்ற குறைந்த திறன் கொண்ட மாடல்கள் கார்புரேட்டர் எஞ்சினுடன் கூடுதல் சிசி கொண்ட பல்சர் 200, பல்சர் 220, பல்சர் 250 ஆகியவை எஃப்ஐ எஞ்சினை பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது.
புதிய டிசைன்
தற்போதுள்ள வடிவ மொழியை முற்றிலும் மாற்றப்படாமல் சில அடிப்படையான தாத்பரியங்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு மிக நேர்த்தியான ஸ்டைலிஷான பெட்ரோல் டேங்க், அலாய், வீல், முழுமையான எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் விளக்கு, மோனோ ஷாக் அப்சார்பர் என அதிகபட்ச பிரிமியம் வசதிகளை பெற்றதாக வரவுள்ளது.
புதிய பல்சர் 250
தற்போது பல்சர் வரிசையில் பல்சர் 150. பல்சர் 160, பல்சர் 180, பல்சர் 200, பல்சர் 220 ஆகிய மாடல்களை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த வரிசையில் பல்சர் 180 பைக் மாடல் சந்தையிலிருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தேலும் கூடுதலாக டியூக் 250 எஞ்சினை அடிப்படையாக கொண்டு பல்சர் 250 பைக் விற்பனைக்கு வெளியிடபகபட வாய்ப்புகள் உள்ளது.
பல்ஸர் UG6 வருகை விபரம்
தற்போது பஜாஜ் ஆட்டோ நிறுவனம், ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கியுள்ளதால், முதல்முறையாக பல்ஸர் பைக் வரிசை 2019 ஆம் ஆண்டின் மத்தியில் பார்வைக்கு வெளியாக உள்ள நிலையில், 2019 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2020 ஆம் ஆண்டின் மத்தியில் பல்சர் வரிசை விற்பனைக்கு வெளியாக வாய்ப்புகள் உள்ளது.