மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா

இந்தியாவின் பயணிகள் வாகன சந்தை தொடர்ந்து மிகப்பெரிய விற்பனை சரிவினை அடைந்துள்ளது. கடந்த மே 2019 மாதந்திர விற்பனையில் மாருதி சுசுகி உட்பட அனைத்து முன்னணி கார் தயாரிப்பாளர்களும் விற்பனையில் பெரும் சரிவடைந்துள்ளனர்.

வாங்கும் திறன் சரிவு, நிலையற்ற நிதி நிலைமை போன்றவற்றுடன் தேர்தல் போன்றவை விற்பனை சரிவுக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து முன்னணி மாருதி சுசுகி நிறுவனமும் சரிவினை கண்டுள்ளது.

இந்திய பயணிகள் வாகன சந்தை

பயணிகள் கார் சந்தையில் முதன்மையான மாருதி சுசுகி நிறுவனம விற்பனை 23 சதவீத சரிவினை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு மே 2018-ல் 1,63,200 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில் மே 2019-ல் 1,25,552 கார்களை மட்டும் விற்பனை செய்துள்ளது.

ஹூண்டாய் இந்தியாவின் விற்பனை எண்ணிக்கை கடந்த 2018-ல் மே மாதம் 45,008 யூனிட்டுகள் விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த 2019 மே மாதம் விற்பனை எண்ணிக்கை 42,502 ஆக பதிவு செய்து, 5.6 சதவீத சரிவினை கண்டுள்ளது.

hyundai venue

மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம், கடந்த ஆண்டு 2018 மே மாதத்தை விட 0.52 சதவீத சரிவை கண்டு 20,608 யூனிட்டுகளை மே 2019-ல் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு மே 2018-ல் 20,715 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், மே மாத விற்பனையில் 37.68 சதவீத சரிவினை கண்டுள்ளது. கடந்த 2018 மே மாத முடிவில் 17,489 என விற்பனை எண்ணிக்கை செய்திருந்தது. கடந்த 2019 மே மாதம் 10,900 விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

தயாரிப்பாளர் மே-19 மே-18 %வித்தியாசம்
மாருதி சுசுகி 125552 163200 -23.07
ஹூண்டாய் 42502 45008 -5.6
மஹிந்திரா 20608 20715 -0.52
டாடா 10900 17489 -37.68
ஹோண்டா 11442 15864 -27.87
டொயோட்டா 12138 13113 -7.44