Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

தரமான சாதனையை படைக்கும் ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ்

by automobiletamilan
April 20, 2019
in வணிகம்

ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ்

குறைவான விலையில் தரமான 650சிசி என்ஜின் கொண்ட ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ் பைக் மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்ட 5 மாதங்களில் 5168 பைக்குகள் டெலிவரி செய்யப்பட்டு புதிய சாதனையை இந்தியாவின் 500-800சிசி சந்தையில் படைத்துள்ளது.

கடந்த 2018-2019 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ள 500சிசி முதல் 800 சிசி வரையிலான சந்தையில் மொத்தம் விற்பனை எண்ணிக்கை 8,264 ஆக பதிவு செய்துள்ளது. இதே காலகட்டத்தில் முந்தைய நிதி ஆண்டில் 3,585 யூனிட்டுகளாகும்.

ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ்

என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 பைக்குகள் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச சந்தையிலும் அபரிதமான வரவேற்பினை பெற்றுள்ளது. குறிப்பாக தாய்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 650 ட்வீன்ஸ் மாடல்களுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

500 க்கு மேற்பட்ட சிசி முதல் 800 சிசி வரையிலான சந்தையில் முன்னிலை வகித்து வந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி ராயல் என்ஃபீல்ட் முன்னிலை பெற்றுள்ளது.

648சிசி எஞ்சின் அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

வகை 648 cc, SOHC, air-cooled, parallel-twin
குதிரைத் திறன் 47 bhp at 7,100 rpm
முறுக்கு விசை 52 Nm at 4,000 rpm
Bore x Stroke 78 mm x 67.8 mm
Compression Ratio 9.5:1
கியர்பாக்ஸ் 6 வேக மேனுவல்
எரிபொருள் வகை ப்யூவல் இன்ஜெக்‌ஷன்
இக்னிஷன் டிஜிட்டல் ஸ்பார்க் இக்னிஷன் – TCI

ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ் விலை பட்டியல்

Interceptor 650 – ரூ. 2.50 லட்சம் முதல் ரூ.2.70 லட்சம்

Continental GT 650 – ரூ. 2.65 லட்சம் முதல் ரூ.2.85 லட்சம்

Tags: Enfield Cycle Co. LtdRoyal Enfield 650 Twinsராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version