இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் விலையை உயர்த்தியுள்ளது. அனைத்து வர்த்தக ரீதியான வாகனங்களும் விலை உயர்த்தப்பட உள்ளது.
இந்த விலை உயர்வு அனைத்து வணிக வாகனங்களுக்கும் பொருந்தும்.
நிறுவனம் தனது வணிக வாகனங்களின் விலைகளை அக்டோபர் 1, 2023 முதல் 3% வரை உயர்த்துவதாக செப்டம்பர் 18 இன்று அறிவித்தது. இது உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்வு தாக்கத்தை ஈடுசெய்யும் வகையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.