டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் மற்றும் எஸ்யூவி, EV உட்பட அனைத்து பயணிகள் மாடல்களின் விலை 0.6 % வரை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உற்பத்தி மூலம் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி மூலப் பொருட்கள், மற்ற செலவுகள் ஈடுகட்டவே விலை உயர்வு என இந்நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜூலை 16, 2023 வரை செய்யப்பட்ட முன்பதிவுகளுக்கும், ஜூலை 31, 2023 வரையிலான டெலிவரிகளுக்கும் விலையில் எந்த மாற்றமும் இருக்கது என உறுதிப்படுத்தியுள்ளது.
Tata Motors Price Hike
டாடா மோட்டார்ஸ் பஞ்ச், அல்ட்ராஸ், டிகோர், டியோகோ, நெக்ஸான், ஹாரியர், சஃபாரி உள்ளிட்ட அனைத்து மாடல்களும், இவி பிரிவில் கிடைக்கின்ற டிகோர், டியோகோ, நெக்ஸான் ஆகியவற்றையும் விலை ஏற்ற உள்ளது.
ஜூன் மாதம் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் 47,359 யூனிட்களின் மொத்த விற்பனையைப் பதிவு செய்துள்ளது, இது ஆண்டுக்கு ஆண்டு 5% அதிகரிப்பு (ஜூன் 2022-ல் 45,305 யூனிட்கள்).