இந்தியாவில் விற்பனையில் முன்னணி கார்களில் டாப் 10 கார்கள் பட்டியலை அறிந்து கொள்ளலாம். கடந்த ஜூன் 2019 மாதந்திர விற்பனை நிலவரப்படி இந்தியாவின் ஓட்டுமொத்த ஆட்டோமொபைல் சந்தை 6 சதவீத வீழ்ச்சி அடைந்துள்ளது.
முன்னணி மோட்டார் வாகன நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி விற்பனை கடுமையான சரிவினை கண்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் டிசையர், ஸ்விஃப்ட் மற்றும் ஆல்ட்டோ கார்கள் விற்பனை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 முதல் 10 இடங்களை ஒன்றாக இடம்பெற்று வந்த நிலையில்,தற்போது இடம்பெறவில்லை. ஆனால் இந்நிறுவனத்தின் இரண்டு எஸ்யூவி மாடல்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஹூண்டாய் வெனியூ மற்றும் கிரெட்டா எஸ்யூவி இடம்பெற்றுள்ளது.
டாப் 10 கார்கள் – ஜூன் 2019 முழு அட்டவனை
வ.எண் | தயாரிப்பாளர்/மாடல் | ஜூன் 2019 |
1. | மாருதி சுசூகி ஆல்டோ | 18,733 |
2. | மாருதி சுசூகி ஸ்விஃப்ட் | 16,330 |
3. | மாருதி சுசூகி டிசையர் | 14,868 |
4. | மாருதி சுசூகி பலேனோ | 13,689 |
5. | மாருதி சுசூகி வேகன்ஆர் | 10,228 |
6. | ஹூண்டாய் எலைட் ஐ20 | 9,271 |
7. | மாருதி சுசுகி ஈக்கோ | 9,265 |
8 | மாருதி சுசூகி விட்டாரா பிரெஸ்ஸா | 8,871 |
9. | ஹூண்டாய் கிரெட்டா | 8,763 |
10. | ஹூண்டாய் வெனியூ | 8,334 |