கடந்த மார்ச் மாதநிர விற்பனையில் ஹோண்டா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி டிவிஎஸ் மோட்டார் கம்பெனி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஹோண்டாவின் முந்தைய வருடாந்திர விற்பனையை விட 46.07 சதவீதம் சரிவடைந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், மொத்தமாக உள்நாட்டில் விற்பனை எண்ணிக்கை 2,47,710 ஆக பதிவு செய்துள்ளது.
டிவிஎஸ் மோட்டார் விற்பனை நிலவரம்
பொதுவாகவே கடந்த 2019 நிதியாண்டில் முதன்மையான ஹீரோ மோட்டோகார்ப் முதல் ராயல் என்ஃபீல்டு வரை விற்பனையில் கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது. ஹோண்டா மற்றும் டிவிஎஸ் என இரு நிறுவனங்களும் முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஹோண்டா நிறுவனத்தின் பிரபலமான ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனை எண்ணிக்கை மிக கடுமையாக சரிய தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த மார்ச்சில் 17 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் இந்நிறுவன கிரேஸியா ஸ்கூட்டர் விற்பனையில் பெரும் வீழ்ச்சி அடைந்திருக்கின்றது.
கடந்த ஆண்டு மார்ச் 2018-ல் 2,65,166 வாகனங்களை விற்பனை செய்திருந்த டிவிஎஸ் இந்த ஆண்டு மாரச் 2019-ல் 2,47,710 என்ற விற்பனை எண்ணிக்கை கொண்டுள்ளது. இரு மாதத்துடன் ஒப்பீடுகையில் 6.6 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் 2018-ல் 2,22,325 வாகனங்களை விற்பனை செய்திருந்த ஹோண்டா இந்த ஆண்டு மாரச் 2019-ல் 4,17,380 என்ற விற்பனை எண்ணிக்கை கொண்டுள்ளது. இரு மாதத்துடன் ஒப்பீடுகையில் 46.7 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்திய இரு சக்கர வாகன சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றது. குறிப்பாக புதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் வாகன காப்பீடு போன்ற காரணங்களால் குறைந்த விலை டூ வீலர்கள் விலை சராசரியாக 8,000 வரை அதிகரித்துள்ளது.