ஃபோக்ஸ்வேகன் ஃபோக்ஃபெஸ்ட் கொண்டாட்டம்

0
ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனம் ஃபோக்ஃபெஸ்ட் என்ற பெயரில் பண்டிகை கால கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளது. ஃபோக்ஃபெஸ்ட் கொண்டாட்டத்தில் சிறப்பு சலுகைகளை பெற இயலும்.

ஃபோக்ஃபெஸ்ட்

30 நாட்களுக்கு ஃபோக்ஸ்வேகன் கார் மாடல்களான போலோ , வென்ட்டோ மற்றும் ஜெட்டா மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் , சிறப்பு சுற்றுலா திட்டம் மற்றும் பரிசுப்பொருட்களை பெறலாம்.

ஃபோக்ஸ்வேகன் போலோ கார் வாங்கினால் 3.99 சதவீத வட்டி விகிதம் , வென்ட்டோ ஹைலைன் ப்ளஸ் வேரியண்ட் வாங்கினால் 9.75 சதவீத வட்டி விகிதம் மற்றும் ஜெட்டா கார் வாங்கினால் 9.99 சதவீத வட்டி விகிதம் போன்ற சிறப்பு கடன் திட்டங்கள் மூலம் வாங்க இயலும். மேலும் கூடுதலாக 1 வருடத்திற்க்கு இலவச வாகன காப்பீடு பெறலாம்.

Google News
வென்ட்டோ

எக்ஸ்சேஞ்ச் அல்லது யூஸ்டூ கார் வாங்கினால் இலவச சிறப்பு சுற்றலா திட்டத்தை பெறமுடியும். மேலும் லக்கி டிரா குலுக்கல் முறையில் ப்ளாபுங்கட் மல்டிமீடியா டேப்லட் வெல்லாம். ஆனால் லக்கி டிரா குலுக்கல் முறை தமிழ்நாடு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இல்லை.

Volkswagen announces Volkfest Festival offers