ஃபோக்ஸ்வேகன் இந்தியா லாப கணக்கை தொடங்கியது

0

கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வரும் நிலையில் முதன்முறையாக இந்திய நிறுவனத்தின் சார்பாக 2015 ஆம் நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ.604 கோடியாக பதிவு செய்துள்ளது.

volkswagen-ameo

நடந்து வரும் 2016 ஆம் நிதி ஆண்டின் நிகர லாபம் ரூ.500-600 கோடியாக இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. லாப கணக்கு குறைத்து மதிப்பிட காரணமாக மாசு உமிழ்வு மோசடியின் காரணமாக 1.90 லட்சம் ஃபோக்ஸ்வேகன் கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு இந்திய சந்தையை விட ஏற்றுமதி சந்தையை லாபத்தினை ஈட்டி தருவதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது. குறைவான விற்பனை எண்ணிக்கையை உள்நாட்டில் பதிவு செய்து வந்தாலும் லத்தின் அமெரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார்களின் மூலம் இலாபத்தினை பெற்றுள்ளது. இந்தியாவில் முதலீடு செய்துள்ள மற்ற பன்னாட்டு நிறுவனங்களான ஃபோர்டு , ஹோண்டா மற்றும் ஜிஎம் போன்ற நிறுவனங்கள் பெரிதாக இதுவரை லாபத்தினை தொடவில்லை.

கடந்த சில வருடங்களாகவே ஃபோக்ஸ்வேகன் இந்திய பிரிவு தொடர்ந்து வருடாந்திர உற்பத்தியை அதிகரித்து வந்துள்ளதாலும் பெரிதாக இந்திய சந்தையில் விற்பனை இல்லையென்றாலும் ஏற்றுமதி சந்தையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. மேலும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஃபோக்ஸ்வேகன் அமியோ காரும் நல்ல தொடக்கத்தினை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. உலக அளவில் உள்ள பெரும்பாலான ஃபோக்ஸ்வேகன் ஆலைகள் நஷ்டத்தினை சந்தித்துள்ள நிலையில் ஃபோக்ஸ்வேகன் இந்தியா லாப கணக்கினை தொடங்கியுள்ளது.