ஃபோக்ஸ்வேகன் குழுமம் மதிப்பை இழந்தது – அதிர்ச்சி ரிபோர்ட்

0
உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் குழுமம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தவறான நடவடிக்கையால் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஃபோக்ஸ்வேகன் நன்மதிப்பை இழந்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன்
ஃபோக்ஸ்வேகன் மார்ட்டின் வின்டர்கான்
ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் ஆடி , பென்ட்லி , புகாட்டி , லம்போர்கினி , போர்ஷே , ஸ்கோடா , ஸ்கேனியா போன்ற உலக பிரசத்தி பெற்ற கார் மற்றும் வர்த்தக வாகன நிறுவனங்கள் இயங்கி வருகின்றது.
சூற்றுசூழல் மோசடி
வாகனங்களில் எரிந்து வெளியாகும் கழிவுகளில் கலந்திருக்கும் அதிகப்படியான மாசுகளை குறைப்பதற்க்காக பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் கார்பன் , நைட்ரஜன் ஆக்ஸைடூ போன்ற வாயுவுகளின் அளவினை குறைவாக வெளியிடும் வகையில் சில பொருட்கள் பயன்படுத்தியும் மென்பொருள்களின் உதவியுடன் குறைவாக வெளியிடும் வகையில் அனைத்து வாகனங்களிலும் இது பன்படுத்தப்பட்டு வருகின்றது.
ஆனால் ஃபோக்ஸ்வேகன் குழுமம் மென்பொருள் உதவியுடன் மட்டுமே எமிசன் தரம் சரியாக உள்ளதாக கான்பித்துள்ளது. தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆய்வகத்தில் வாகனத்தை சோதனை செய்தால் குறைவான எமிசனை வெளியிடும் வகையில் தனியான மென்பொருளை உருவாக்கி டீசல் கார்களில் பன்படுத்தியுள்ளது.
வாகனங்கள் சாலையில் இயங்கும்பொழுது ஆய்வக சோதனையை விட 15 முதல் 35 சதவீதம் வரை கூடுதலாக வெளியிட்டுள்ளது. தீவரமான ஆராய்ச்சி முடிவில் சாஃபட்வேரில் ஃபோக்ஸ்வேகன் மோசடி அம்பலமாகியுள்ளது.
மூவர் குழு
இந்த மோசடியை வெளிச்சத்திற்க்கு கொண்டு வந்தவர்கள் மேற்கு வெர்ஜீனியா பல்கலைகழகத்தின் மாற்று எரிபொருள், எஞ்சின் மற்றும் எமிசன் மையத்தை சேர்ந்த அரவிந்த் திருவேங்கடம் ,டேனியல் கார்டர் மற்றும் மார்க் பெஸ்ச் ஆவர்
 அரவிந்த் திருவேங்கடம் தமிழகத்தை சேர்ந்தவர். மேலும் இந்த குழுவின் வழிகாட்டியாக செயல்பட்டவர் மிருதல் கவுதம் என்பவர் இவரும் இந்தியாவை  சேர்ந்தவர்.
எவ்வளவு கார்கள்
சுமார் 11 மில்லியன் கார்கள் அதாவது 1.10 கோடி கார்கள் இந்த மோசடியால் பாதிப்படைந்துள்ளதாம். இவற்றி ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் பெரும்பாலான கார் பிராண்டுகளும் அடங்கும் என்றே தெரிகின்றது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலே அதிகப்படியான கார்கள் இருக்கலாம். 
அபராதம்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மீது அமெரிக்காவின்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை விசாரித்ததில் ஃபோக்ஸ்வேகன் குழுமம் தவறை ஒப்புகொண்டுள்ளதால் 18 பில்லியன் டாலர் அபராதமாக விதிக்கப்படலாம் என தெரிகின்றது.
புதிய சிஇஓ

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி மார்ட்டின் வின்டர்கான் பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய சிஇஓ வாக போர்ஷே தலைவர் மேத்தியஸ் முல்லர் நியமிக்கப்பட்டுள்ளார்
மதிப்பை இழந்தது
உலகின் மிகப்பெரிய ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் பங்கு சந்தை மதிப்புகள் குறைந்துள்ளது. மேலும் விற்பனை பெரிதாக பாதிப்படைந்துள்ளது. பிராண்டின் நன்மதிப்பை இழந்துள்ளது. முதல் 6 மாதங்களில் உலக அளவில் அதிக கார்களை விற்பனை செய்து முதலிடத்தை நோக்கி பயணித்து கொண்டிருந்த ஃபோக்ஸ்வேகன் குழுமத்திற்க்கு மிகப்பெரிய இழப்பாகும்.