ஃபோக்ஸ்வேகன் டிகுவான் , பஸாத் கார்களின் வருகை விபரம்

2017 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி மற்றும் ஃபோக்ஸ்வேகன் பஸாத் செடான் காரையும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

 

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக இந்திய சந்தைக்கு பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள டிகுவான் எஸ்யூவி பிரிமியம் ரக பிரிவில் வரவுள்ளது.

MQB பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள டிகுவான் எஸ்யூவி காரில் 177 bhp பவர் , 350 என்எம் டார்க் வெளிப்படுத்தும 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 7 வேக டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். பாகங்களை தருவித்து ஒருங்கினைத்து விற்பனைக்கு வரலாம். முந்தைய தலைமுறை டிகுவான் காரை விட பன்மடங்கு தரம் , பாதுகாப்பு , தோற்றம் போன்றவற்றில் உயர்வு பெற்று விளங்குகின்றது.

சான்டா ஃபீ , எண்டேவர் ,ஃபார்ச்சூனர் , பஜெரோ ஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைய உள்ள டிகுவான் காரின் விலை ரூ.30 லட்சத்தில் தொடங்கலாம். வருகின்ற ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வரக்கூடும்.

ஃபோக்ஸ்வேகன் பஸாத்

கடந்த சில வருடங்களுக்கு முன் சந்தையிலிருந்து நீக்கப்பட்ட சொகுசு செடான் ரக மாடலான ஃபோக்ஸ்வேகன் பஸாத்  மீண்டும் வரவுள்ளதால் இந்தியாவிலே பாகங்களை ஒருங்கினைத்து விற்பனைக்கு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பஸாத் காரில் 177 hp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கலாம். இதில் 6 வேக டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.ரூ.32 லட்சம் முதல் பஸாத் காரின் விலை தொடங்கலாம்.

Recommended For You