சென்னை அருகே பிரபல கார் பைக் பந்தய வீரர் அஸ்வின் சுந்தரின் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலே அஸ்வின் மற்றும் அவருடைய மனைவி என இருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
அஸ்வின் சுந்தர்
- 27 வயதே நிரம்பிய அஸ்வின் சந்தர் ஒட்டி வந்த பிஎம்டபிள்யூ Z4 கார் தீ விபத்தில் சிக்கியது.
- விபத்தில் அஸ்வின் மனைவி நிவேதிதாவும் உயிரிழப்பு.
- 2003 ஆம் ஆண்டு முதன்முறையாக எம்ஆர்எஃப் மோனடையல் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றார்.
சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகர் அருகே நடந்துள்ள இந்த விபத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து மரம் மற்றும் சுற்று சுவருக்கும் இடையே சிக்கியதால் காரின் கதவுகள் திறக்கமுடியாமல் போனதாலே இருவருமே தப்பிக்க வழியின்றி உயிரிழந்திருக்கலாம் என்றே கருதப்படுகின்றது.
மரத்தில் மோதியதில் தீப்பிடித்து 3 மணி நேரமாக எரிந்து காரிலிருந்து அஸ்வின் மற்றும் அவரது மனைவியின் உடலை மீட்க அரை மணி நேரமாக போராடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தொழில் முறை கார் பந்தய வீரரான அஸ்வின் கார் மற்றும் பைக் சார்ந்த ரேஸ் பந்தயங்களில் பல்வேறு சாம்பியன் பட்டங்களை வென்றவராக திகழ்ந்தவர் இந்த கோர விபத்தில் சிக்கி பலியானது ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
அஸ்வின் மற்றும் அவரது மனைவி நிவேதிதா இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை ஆட்டோமொபைல் தமிழன் தெரிவித்துக் கொள்கின்றது.