இந்தியாவில் ஹோண்டா ஆப்ரிக்கா ட்வீன் சோதனை உற்பத்தி ஆரம்பம்

0

இந்தியாவில் ஹோண்டா ஆப்ரிக்கா ட்வீன் அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிள் சோதனை ஓட்ட உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக ஹோண்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Honda Africa Twin

Google News

ஹோண்டா ஆப்ரிக்கா ட்வீன்

  • 998சிசி இஞ்சின் பெற்ற பெர்ஃபாமென்ஸ் மாடலாக ஆப்ரிக்கா ட்வீன் விளங்கும்.
  • ஆப்ரிக்கா ட்வீன் மாடலில் 6 வேக DCT ஆட்டோ பாக்ஸ் பெற்றிருக்கும்.
  • வருகின்ற ஜூலை 2017ல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

முதன்முறையாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்பட்டுத்தப்பட்ட இந்த மாடல்  இந்திய சந்தைக்கு ஜூலை மத்தியில் வெளியிடப்பட உள்ளது. ஹோண்டா ஆப்ரிக்கா ட்வீன் 1000சிசி அட்வென்ச்சர் ரக ஸ்போர்ட்டிவ் பைக்கில் சர்வதேச அளவில் 998சிசி இஞ்ஜின் பெற்று 6 வேக DCT (Dual clutch Transmission )  ஆட்டோ பாக்ஸ் மற்றும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

Honda Africa Twin engine

94 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 998சிசி லிக்யூடு கூல் பேரலல் ட்வீன் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 98 Nm ஆகும். இதில் 6 வேக DCT (Dual clutch Transmission )  ஆட்டோ பாக்ஸ் மற்றும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் உயர்ரக வேரியன்ட் மாடலான ஆட்டோ பாக்ஸ் மட்டுமே இடம்பெற உள்ளது.

சிகேடி எனப்படும் பாகங்களை தருவித்து ஒருங்கிணைப்பட உள்ள இந்த மாடல் ஹோண்டாவின் மானசேர் ஆலையில் சோதனை ஓட்ட உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதால் அடுத்த சில மாதங்களில் அதாவது ஜூலை மாத மத்தியில் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.

Honda Africa Twin cluster Honda Africa Twin rear