இந்திய ராணுவத்தின் புதிய வாகனமாக டாடா சஃபாரி எஸ்யூவி தேர்வு

0

இந்திய ராணுவத்துக்கு புதிய வாகனத்தை தேர்வு செய்வதற்கு பங்கேற்ற மஹிந்திரா ஸ்கார்ப்பியோ மற்றும் டாடா சஃபாரி எஸ்யூவிகளில் இரு கார்களுமே வெற்றி பெற்றிருந்த நிலையில் நிதிரிதீயாக ஸ்கார்ப்பியோவை பின்னுக்கு தள்ளி சஃபாரி வெற்றி பெற்றுள்ளது.

tata-safari-storme-celebration-edition

பல ஆண்டுகளாகவே பயன்படுத்தப்பட்டு வரும் மாருதி ஜிப்ஸி காருக்கு மாற்றாக புதிய மாடலை தேர்வு செய்வதற்காக மலையறுதல் ,பனி , பாலைவனம் , சதுப்பு நிலம் என பல தரப்பட்ட சோதனைகளில் வெற்றி பெற்ற இந்தியாவின் தயாரிப்பாளர்களான  டாடா நிறுவனத்தின் சஃபாரி ஸ்ட்ரோம் மற்றும் மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ மாடல்களும் நிதி ஒப்பந்தம் வாயிலாக ஸ்கார்ப்பியோவை பின்னுக்கு தள்ளிய சஃபாரி காரை இந்தியாவின் புதிய ராணுவ வாகனமாக தேர்வு செய்துள்ளனர். முதற்கட்டமாக 3192 கார்களுக்கான ஆர்டர்களை பெற்றுள்ள டாடா மோட்டார்ஸ் வருகின்ற வருடங்களில் இதுபோன்று 10 மடங்கு கூடுதலான ஆர்டர்களை பெற வாய்ப்புகள் உள்ளது.

முந்தைய செய்தி ; புதிய ராணுவ வாகன சோதனையில் வெற்றி யாருக்கு ?

பயன்பாட்டில் உள்ள காரினை விட மிகசிறப்பாக மேம்படுத்தப்பட்ட உறுதிமிக்க செயல்பாட்டினை வெளிப்படுத்தும் காராகவும் , ஆஃப் ரோடு சாலைகளுக்கு ஏற்ற வாகனமாகவும் டாடா சஃபாரி மாடலை ராணுவத்துக்கு டாடா வடிவமைக்க உள்ளது.

தற்பொழுது பயன்பாட்டில் உள்ள மாருதி ஜிப்ஸி வாகனம் ஜிஎஸ்500 (GS 500 – General Service 500kg) எனப்படும் 500 கிலோ எடை பிரிவில் உள்ளதால் பெருகிவரும் சவால்களுக்கு ஏற்ற வகையில் ஜிஎஸ்800 அதாவது 800 கிலோ எடை பிரிவில் வாகனங்களை தேர்வு செய்து உள்ளதால் புதிய சஃபாரி ஸ்டோரம் தேர்வு பெற்றுள்ளது. மேலும் கடந்த வருடத்தில் டாடா மோட்டார்சின் பாதுகாப்பு வாகன பிரிவு 1239 மல்டிஆக்சில் (6×6) டிரக்குகளுக்கான ஆர்டரை ரூ.900 கோடி மதிப்பில் பெற்றிருந்தது.