ஃபோக்ஸ்வேகன் போலோ காரை அடிப்படையாக கொண்ட கிராஸ் போலோ காரில் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் ரூ.6.94 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
போலோ காரில் சில வெளிப்புற மாற்றங்களுடன் கிராஸ்ஓவர் மாடலாக விற்பனைக்கு வந்த கிராஸ் போலோ காரில் டீசல் என்ஜின் மட்டுமே விற்பனையில் இருந்து வந்த நிலையில் 1.2 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 74பிஎச்பி மற்றும் டார்க் 110என்எம் ஆகும். 5 வேக மெனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.
இரண்டு காற்றுப்பைகள், ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு வசதிகள் நிரந்தர அம்சங்களாக இருக்கும். மேலும் ஸ்டீயரியங் வீல் கன்ட்ரோல், ஆடியோ சிஸ்டம் உள்ளது.
ஃபோக்ஸ்வேகன் கிராஸ் போலோ கார் விலை
கிராஸ் போலோ கார் விலை — ரூ. 6.94 இலட்சம் (பெட்ரோல்)
கிராஸ் போலோ கார் விலை — ரூ. 8.14 இலட்சம் (டீசல்)
(ex-showroom Mumbai)
மேலும் வாசிக்க; கிராஸ் போலோ டீசல்
Volkswagen launches Cross Polo 1.2 MPI