எரிபொருள் குழாய் பிரச்சனையால் க்விட் , ரெடி-கோ கார் திரும்ப அழைப்பு

1 Min Read

ரெனோ க்விட் 800சிசி மற்றும் ரெடி-கோ காரில் எரிபொருளை எடுத்து செல்லும் குழாயில் உள்ள பிரச்சனை சரி செய்யும் நோக்கில் மே 18 , 2016 க்கு பிறகு தயாரிக்கப்பட்ட அனைத்து க்விட் மற்றும் ரெடி-கோ கார்களையும் பரிசோதித்து புதிய எரிபொருள் குழாயை பொருத்துவதற்க்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளது.

renault kwid sideview

மே 18 ,2016 தேதியிலிருந்து தயாரிக்கப்பட்ட அனைத்து 800சிசி க்விட் கார்களிலும் எரிபொருளை எடுத்துச்செல்லும் குழாய்களில் உள்ள இடையூறால் எரிபொருள் சிறப்பாக செல்ல இயலாத பிரச்சனையை சரி செய்ய அனைத்து ரெனோ சர்வீஸ் மையங்களிலும் இலவசமாக செய்து தரப்பட உள்ளதாக ரெனோ தெரிவித்துள்ளது.

ரெடி-கோ மற்றும் க்விட் காரில் 54பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 799சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டடுள்ளது. ரெனோ க்விட் கார் மைலேஜ் லிட்டருக்கு 25.17கிமீ ஆகும். க்விட் காரில் 800சிசி இன்ஜின் தவிர 1.0 லிட்டர் இன்ஜின் கொண்ட மாடலும் விற்பனையில் உள்ளது. மேலும் ஏஎம்டி ஆப்ஷன் கொண்ட க்விட் மாடலும் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

TAGGED:
Share This Article
Follow:
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.