சூப்பர் ஹிட் பைக்குகள் 2016 – பிளாஷ்பேக்

கடந்த 2016 ஆம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி சந்தையிலும் வெற்றி பெற்ற சூப்பர் ஹிட் பைக்குகள் 2016 -ல் எவை என்பதனை பிளாஷ்பேக் 2016யில் அறிந்து கொள்ளலாம்.

விற்பனைக்கு வந்த பைக் டிசைன் , விற்பனை எண்ணிக்கை , சிறப்பு வசதிகள் , புத்தாக்கம் மற்றும் ஆட்டோமொபைல் தளத்தில் அதிகம் பார்வையாளர்களை பெற்ற பைக்குளை கொண்டே இந்த பட்டியல் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க – சூப்பர் ஹிட் கார்கள் 2016 

1. டிவிஎஸ் அப்பாச்சி 200 RTR 4V

தமிழகத்தின் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிறப்பான மாடலாக விளங்கும் அப்பாச்சி அணிவரிசையில் அதிகபட்ச சிசி மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய மாடலாக விற்பனையில் உள்ள அப்பாச்சி 200 பைக்கில் 20.2 பிஹெச்பி பவரை வெளிப்படுத்தும் புதிய 200சிசி என்ஜின் மற்றும் 4 வால்வுகள் கொண்ட நுட்பத்துடன் அப்பாச்சி மீண்டும் தனது பலத்தை 200சிசி சந்தையிலும் நிரூபித்துள்ளது.

ஃஎப்ஐ மற்றும் கார்ப் என்ஜின் , ஏபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் இல்லாத மாடல்கள் என பலதரப்பட்ட தேர்வுகளில் அப்பாச்சி 200 ஆர்டிஆர் பைக் கிடைக்கின்றது.

2. ஹோண்டா நவி

வித்தியாசமான தோற்ற அமைப்பே வெகுவாக பெரும்பாலான ரசிகர்களை கவர காரணமாக அமைந்துள்ள நவி மாடல் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளில் கலவையில் இந்திய ஹோண்டா ஆர்&டி பிரிவில் வடிவமைக்கப்பட்ட மாடலாகும். ஆக்டிவா ஸ்கூட்டரின் 110சிசி என்ஜினை பெற்றுள்ள நவி மாடல் அமோக ஆதரவினை பெற்று ஹோண்டா எதிர்பாரத்த எண்ணிக்கையை விட இரு மடங்கு உற்பத்தி கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

3. ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்

பாரம்பரிய தோற்ற அமைப்பினை கொண்ட மோட்டார் சைக்கிள்களை வடிவமைப்பதில் பிரசத்தி பெற நிறுவனமாக விளங்கும் என்ஃபீல்டு நிறுவனத்தில் ஹிமாலயன் பைக் அமோக ஆதரவினை பைக் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இந்திய மடுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளிலும் ஹிமாலயன் விற்பனையில் உள்ளது.  இதில் 24.5 பிஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 411சிசி என்ஜினை பெற்றுள்ளது.

4. டிவிஎஸ் விக்டர்

மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் விக்டர் 110 சிசி பைக் மாடலில்  9.6PS ஆற்றல் மற்றும் 9.4 Nm டார்க் வெளிப்படுத்தும் 109.7 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மிகவும் சவலான 110சிசி சந்தையில் மிக அமோகமான ஆதரவுடன் விக்டர் அபரிதமான வெற்றி பெற்றுள்ளது.

tvs victor

5. பஜாஜ் வி15

பஜாஜ் நிறுவனத்தின் 150சிசி சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வி பிரண்டில் வெளிவந்த முதல் மாடலான வி15 அமோக ஆதரவினை பெற முக்கிய காரணங்களில் ஒன்றான டிசைன் மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்கப்பலின் மெட்டல் பாகங்ளைகொண்டு தயாரிக்கப்பட்டதும் முக்கிய காரணமாகும். வி பிராண்டில் கூடுதலாக 125 சிசி மாடலை வி12 என்ற பெயரிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

6. ஹீரோ ஸ்பிளென்டர் 110 ஐஸ்மார்ட்

இந்தியாவின் நெ.1 மோட்டார் சைக்கிள் மாடலாக விளங்கும் ஸ்பிளென்டர் பிராண்டில் வெளிவந்துள்ள 110சிசி ஹீரோ என்ஜின் பொருத்தபட்டு ஐஸ்மார்ட் எனப்படும் எரிபொருள் சேமிக்கும் அமைப்புடன் விளங்கும் ஸ்பிளென்டர் 110 ஐஸ்மார்ட் தனது பலத்தை நிரூபித்துள்ளது.

7. யூஎம் ரெனேகேட் ஸ்போர்ட் எஸ்

இந்தியாவில் 2016 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட முக்கிய பிராண்டுகளில் ஒன்றான யூஎம் நிறுவனத்தின் ரெனேகேட் கமோண்டோ , ரெனேகேட் ஸ்போர்ட் எஸ் நல்ல வளர்ச்சியை இந்தியாவில் பதிவு செய்து வருகின்றது.

um renegade sport s