Automobile Tamilan

செவர்லே என்ஜாய் எம்பிவி விற்பனை நிறுத்தமா ?

ஜிஎம் குழுமத்தின் இந்திய செவர்லே பிரிவு தன்னுடைய வாகனங்களில் வரிசையை முற்றிலும் புதுப்பிக்க திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக செவர்லே என்ஜாய் , செயில் , செயில் யுவா போன்ற மாடல்களை வருட இறுதியில் நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

chevrolet enjoy mpv

வரவிருக்கும் புதிய மாடல்களான புதிய செவர்லே பீட் , பீட் ஏக்டிவ் , எசென்சியா , புதிய க்ருஸ் மற்றும் புதிய ட்ரெயில்பிளேசர் போன்ற மாடல்கள் அடுத்த 24 மாதங்களில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் செவர்லே தெரிவித்திருந்தது. மேலும் மற்றொரு எம்பிவி மாடலான ஸ்பின் காரை இந்திய சந்தைக்கு கொண்டு வர திட்டமிட்டுருந்த திட்டத்தை கைவிட்டுள்ளது.

[irp posts=”7959″ name=”2017 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி விரைவில்”]

எக்கானமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் செவர்லே ஸ்பின் எம்பிவி காரை இந்த வருடத்தின் இறுதியில் நிறுத்தம் செய்யலாம் என திட்டமிட்டுள்ளதாக தகவலை வெளியிட்டுள்ளது. மற்ற செயில் செடான் மாடலுக்கு மாற்றாக எசென்சியா செடான் நிலை நிறுத்தப்பட உள்ளதாலும், செயில் யுவா ஹேட்ச்பேக் மாடல் பெரிதாக வரவேற்பினை பெறாத காரணத்தால் இந்த மாடலை இந்த வருடத்தின் இறுதியில் நிறுத்தப்படலாம்.

 

 

 

2013 ஆம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட செவர்லே என்ஜாய் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு என்ஜின்களுடன் விற்பனையில் உள்ளது. கடந்த வருடத்தில் சிறிய அளவிலான தோற்ற மாற்றத்தை பெற்றுள்ளது. மேலும் புதிதாக இந்திய சந்தைக்கு வரவிருந்த ஸ்பின் எம்பிவி திட்டத்தினை கைவிட்டுள்ளதால் என்ஜாய் சந்தையில் தொடருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

[irp posts=”8013″ name=”செவர்லே பீட் , பீட் ஏக்டிவ் , எசென்சியா கார்கள் விரைவில்”]

Exit mobile version