செவர்லே செயில் செடான் கார் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதை 2 மாதங்களின் நடந்துள்ள முன்பதிவு மூலம் உறுதியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட செவர்லே செயில் 7000 முன்பதிவுகளை கடந்துள்ளது.
செவர்லே செயில் ஆனது செடான் கார் பிரிவில் உள்ள ஸ்விப்ட் டிசையருக்கு மிக பெரிய சவாலை கொடுத்துள்ளது. மேலும் வருகிற 11யில் வெளிவரவுள்ள இந்தியாவின் அதிக மைலேஜ் தரக்கூடிய காராக ஹோண்டா அமேஸ் விளங்கும். எனவே செடான் கார் பிரிவில் வலுவான போட்டி தொடங்கிவிட்டது.
செவர்லே செயில் செடான் கார் ஸ்விப்ட் டிசையர் காரை விட நல்ல இடவசதி உள்ளது. 8 விதமான மாறுபட்டவையில் செயில் கிடைக்கும். விலை டிசையருடன் போட்டியிடும் வகையில் உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிலும் கிடைக்கும்.
1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தியுள்ளனர். டீசல் மைலேஜ் லிட்டருக்கு 22.1 கிமீ மற்றும் பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 18.2 கிமீ ஆகும்.
செவர்லே செயில் செடான் சிறப்பு பார்வை பதிவினை வாசிக்க