டாடா ஜீக்கா கார் மிக விரைவில் – TATA ZICA

0
டாடா கைட் என்ற பெயருடன் அழைக்கப்பட்ட காருக்கு டாடா ஜீக்கா ( Tata Zica ) என்ற பெயரினை டாடா மோட்டார்ஸ் வைத்துள்ளது. டாடா ஸீக்கா கார் ஜனவரி 2016 யில் விற்பனைக்கு வரவுள்ளது.

TATA ZICA

கைட் என்ற குறியீட்டு பெயரில் தயாரிக்கப்பட்டு வந்த  பி பிரிவு ஹேட்ச்பேக் காருக்கு ஜீக்கா என்ற பெயரினை சூட்டியுள்ளது. மேலும் ஜிக்கா காரை அடிப்படையாக கொண்ட செடான் காருக்கு டாடா ஸ்வே என்ற பெயரை சூட்டியுள்ளது.

டாடா நிறுவனத்தின் புதிய 1.05 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 67 பிஹெச்பி மற்றும் டார்க் 140என்எம் ஆகும்.

TATA ZICA
TATA ZICA

ஸெஸ்ட் மற்றும் போல்ட் கார்களில் பயன்படுத்தப்பட்ட 84பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போ பெட்ரோல் என்ஜினும் பொருத்தப்பட்டிருக்கும்.

5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வர வாய்ப்புகள் உள்ளது.

இன்டிகா காரின் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஜீக்கா கார் டாடா போல்ட் மற்றும் ஸெஸ்ட் காரில் உள்ள பல நவீன வசதிகளை பெற்றிருக்கும். ஜிக்கா காரின் போட்டியாளர்கள் செலிரியோ , ஆல்ட்டோ கே10 போன்ற கார்களாகும்.

டாடா ஜீக்கா காரின் விலை ரூ.3.80 லட்சம் முதல் 5.30 லட்சத்திற்க்குள் ஆன்ரோடு விலையில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

TATA ZICA
டாடா ஜீக்கா

Tata Zica to launch on January 2016