டுகாட்டி 9 புதிய பைக்குகளை களமிறக்குகின்றது

0
டுகாட்டி நிறுவனம் புதிதாக 9 பைக் மாடல்களை வரும் மிலன் EICMA 2015 ஷோவில் அறிமுகம் செய்ய உள்ளது. டுகாட்டி 9 பைக் மாடல்களில் இரண்டு புதிய பிரிவுகளில் அறிமுகம் செய்ய உள்ளது.

டுகாட்டி மான்ஸ்டர் 1200R
டுகாட்டி மான்ஸ்டர் 1200R 

பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வந்த டுகாட்டி மான்ஸ்டர் 1200R உள்பட மற்ற 8 பைக்குகளும் இந்திய சந்தைக்கும் வர வாய்ப்புகள் உள்ளது. தற்பொழுது விற்பனையில் இல்லாத இரண்டு புதிய பிரிவுகளில் இரண்டு மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.

மான்ஸ்டர் 1200 ஆர் பைக் மற்ற 8 மாடல்களுமே அடுத்த வருடத்திலே விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய பைக்குகளாக வரவுள்ள 9 மாடல்கள் எங்களது வாடிக்கையாளகள் மற்றும் ஆர்வலர்களுக்கு மிக பெரிய சவாலாக 2016 அமையும் என டுகாட்டி சிஇஓ கிளாடியோ டாமினிக்காலே தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க ; டுகாட்டி மான்ஸ்டர் 1200R

இந்த அறிவிப்பினால் பைக் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. டுகாட்டி மோட்டார்சைக்கிள் வரலாற்றில் முதன்முறையாக இந்த வருடத்தில் இதுவரை 36,000 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. வருட முடிவுக்குள் 50,000 பைக்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

Ducati to Unveil 9 new motorcycles at EICMA 2015