பிரபலமான டுகாட்டி டியாவெல் 1260 மற்றும் டியாவெல் 1260 S என இரு சூப்பர் பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக ஆரம்ப விலையாக 17 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என டியாவெல் 1260 மாடலும், டியாவெல் 1260 S மாடல் விலை 19 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்ட புதிய டியாவெல் பைக்கில் புதிய சேஸ், சஸ்பென்ஷன் உட்பட பல்வேறு ஸ்டைலிங் மாற்றங்களை கொண்டுள்ள இந்த பைக்கில் பவர்ஃபுல்லான 157 hp பவரை வெளிப்படுத்தும் அதி நவீன Testastretta DVT 1262சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் அதிகபட்சமாக 129Nm ஆகும். இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
டியாவெல் 1260 பைக்கின் முன்பக்கத்தில் அட்ஜெஸ்டபிள் 50 மிமீ இன்வெர்டேட் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் கொண்டுள்ளது. பிரேக்கிங்கிற்காக, முன்புறத்தில் இரட்டை டிஸ்க் பிரேக் கொண்ட பிரெம்போ M 4.32 காலிபர்ஸ் மற்றும் பின்புறத்தில் மிதக்கும் ப்ரெம்போ காலிப்பருடன் ஒற்றை டிஸ்க் பயன்படுத்துகிறது. டியாவெல் 1260 ‘எஸ்’ வேரியண்ட்டில் பிரீமியம் 48 மிமீ Ohlins இன்வெர்டேட் ஃபோர்க்ஸ் முன்பக்கத்திற்கும் பின்புறத்திற்கு மோனோஷாக், இரண்டையும் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். பிரேக்கிங் அமைப்பானது முன் பிரேக்குகளுக்கான டிவின் டிஸ்க் பிரெம்போ எம் 50 காலிபர்ஸ் மற்றும் ரேடியல் மாஸ்டர் சிலிண்டருடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பைக்கில் கார்னரிங் ஏபிஎஸ் நிரந்தரமாக வழங்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக, 6 ஆக்சிஸ் ஐ.எம்.யூ-அடிப்படையிலான எலக்ட்ரானிக் ரைடர் உதவியுடன் மூன்று விதமான ரைடிங் மோட்கள் உள்ளது. இவற்றில் அர்பன் மோட் இந்த பைக்கின் பவரை 100 ஹெச்பி ஆக குறைக்கின்றது. டூரிங் மற்றும் ஸ்போர்ட் மோட் முழுமையான பவரை வெளிப்படுத்தும்.
புதிய டியாவெல் 1260 மற்றும் டியாவெல் 1260 எஸ் என இரு மாடல்களுக்கும் டுகாட்டி டீலர்ஷிப்களிலும் கிடைக்க தொடங்கியுள்ளது.