டோமினார் 400 பைக் 2500 முன்பதிவுகளை கடந்தது

கடந்த டிசம்பர் 15, 2016யில் விற்பனைக்கு வந்த பஜாஜ் டோமினார் 400 பைக்கிற்கு அமோகமான ஆதரவினை பெற்று 2500 முன்பதிவுகளை கடந்துள்ளது. தற்பொழுது டோமினார் 22 நகரங்களில் 80 டீலர்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றது.

Bajaj Dominar 400 blue color 1

ஆன்லைன் வழியாக முன்பதிவு நடந்து வரும் டொமினார் 400 பைக்கிற்கு முதற்கட்டமாக 25 டீலர்கள் வாயிலாக டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கியமான 22 நகரங்களில் விற்பனைக்கு வந்துள்ள டாமினார் ஆரம்ப விலை ரூ. 1.38 லட்சம் ஆகும்.

நேரடியான போட்டியாளராக கருதப்படும் ராயல் என்ஃபீல்டு 350 பைக்கை விட விலை குறைவாகவும், மிகவும் ஸ்டைலிசாகவும் விளங்கும் டோமினாரில் கேடிஎம் டியூக் 390 பைக்கில் இடம்பெற்ற அதே 373 சிசி எஞ்சின் டிரிபிள் ஸ்பார்க் நுட்பத்துடன்  34.50 hp பவரை 8000rpm யில் வெளிப்படுத்தும் வகையில் 373.27 சிசி எஞ்ஜின் இடம்பெற்றிருக்கும்.  இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மேலும் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது.  டோமினார் 400 பைக்கின் உச்ச வேகம் மணிக்கு 148 கிமீ ஆகும்.

மேலும் முழுமையாக படிக்க – டோமினார் பைக் முழுவிபரம்

தற்பொழுது பெரும்பாலான டீலர்கள் டொமினார் பைக்கை டெலிவரி செய்ய தொடங்கியுள்ளனர்.

டோமினார்400 பைக் முழு விலை பட்டியல் (நகரங்கள்)

Dominar 400 ABS  Dominar 400 Non-ABS
அகமதாபாத் 1,52,591 1,38,279
பெங்களூரு 1,51,973 1,37,723
சென்னை 1,52,875 1,38,625
கோவை 1,52,875 1,38,625
டெல்லி 1,50,002 1,36,001
ஃபாரிதாபாத் 1,51,004 1,36,925
காசியாபாத் 1,53,144 1,38,894
குருகிராம் 1,51,004 1,36,925
ஹவுரா 1,57,117 1,42,731
ஹைத்திராபாத் 1,52,536 1,38,286
கொச்சி 1,53,682 1,39,432
கொல்கத்தா 1,57,117 1,42,731
கொல்லம் 1,53,682 1,39,432
கோழிக்கோடு 1,53,682 1,39,432
லக்னோ 1,53,144 1,38,894
மும்பை 1,51,199 1,37,340
நொய்டா 1,53,144 1,38,894
பெருந்தல்மன்னா 1,53,682 1,39,432
புனே 1,51,199 1,37,340
சூரத் 1,52,591 1,38,279
திருவனந்தபுரம் 1,53,682 1,39,432
திருச்சூர் 1,53,682 1,39,432

 

அனைத்தும் எக்ஸ்ஷோரும் விலை பட்டியல் ஆகும்.

டோமினார் 400 பைக் படங்கள்