பஜாஜ் வி22 பைக் வருகையா ?

ஐஎன்எஸ் விக்ராந்த் விமானதாங்கி போர்க்கப்பலின் மெட்டல் பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பஜாஜ் வி அணிவரிசை பைக்குகளில் வி15 , வி12 மாடல்களை தொடர்ந்து பஜாஜ் வி22 புதிய பைக் மாடலாக வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்க்ராம்பளர் , கஃபே ரேஸர் மற்றும் ரோட்ஸ்டெர் போன்ற வடிவங்களில் வி22 பைக் என்ற பெயரில் வரலாம் என மாற்றியமைக்கப்பட்ட படங்களை ஒபெர்டின் பஜி என்பவர் வெளியிட்டுள்ளார்.  இதுகுறித்து எவ்விதமான அதிகார்வப்பூர்வ தகவலும் இல்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே தயாரிக்கும் அளவிலான மெட்டல் பாகங்களை கொண்டுள்ள விக்ராந்த் கப்பலின் மையமாக தயாரிக்கப்பட உள்ள வி வரிசையில் வி15 மாடலை தொடர்ந்து வி12 வந்துள்ள நிலையில் மேலும் சில மாடல்களை பஜாஜ் ஆட்டோ தெரிவித்திருந்தது.

பஜாஜ் V22 பைக் விபரம்

வி22 என்ற பெயரில் எதிர்பார்க்கப்படும் அடுத்த வி வரிசை மாடலில் 21 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 220சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இதன் டார்க் 19.12 என்எம் ஆக இருக்கலாம். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

வெளியாகியுள்ள படங்களில் வி22 மாடலில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் , மோனோஷாக் அப்சார்பர் , பிரெம்போ பிரேக்  , ஏபிஎஸ் போன்றவற்றை பெற்றிருந்தாலும் உற்பத்தி நிலை மாடல் ஆனது பல்வேறு மாற்றங்களை பெற்றதாக இருக்கும்.

மேலும் படிக்க – பஜாஜ் வி12 பைக் விலை விபரம்