பறக்கும் தானியங்கி காரினை வடிவமைக்கும் : ஏர்பஸ்

உலக அளவில் விமானங்கள் தயாரிப்பத்தில் பிரசத்தி பெற்ற ஏர்பஸ் நிறுவனம் நகரங்களுக்கு இடையிலான தானியங்கி பறக்கும் காரை தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது.

airbus-cityairbus

ஏர்பஸ் நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ செய்தி குறிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில் சிட்டி ஏர்பஸ் என்ற பெயரில் வடிவமைக்கப்பட உள்ள பறக்கும் கார்களை வாகானா என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வருகின்றது.

உபேர் நிறுவனம் திட்டமிட்டுள்ள ரைட் ஷேரிங் போன்ற அமைப்பிலே வானில் பறக்கும் கார்களை வழங்க ஏர்பஸ் திட்டமிட்டுள்ளது. சிங்கப்பூரில் உலகின் முதல் தானியங்கி கார் டாக்சி சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் உபேர் நிறுவனம் இதுபோன்ற சேவையை அடுத்த சில வாரங்களில் அமெரிக்காவில் தொடங்க உள்ளது. வானில் நகரங்களுக்கான இடையிலான போக்குவரத்து சேவையை அதிகரிக்கும் நோக்கில் பறக்கும் கார் ரைட் ஷேரிங் போல செயல்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

அமெரிக்காவின் சிலிக்கான் வேலி தொழில்நுட்ப மையத்தில் தொடக்க கட்ட சிட்டி ஏர்பஸ் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த வருடத்தின் மத்தியில் பறக்கும் காரின் புரோட்டோடைப் மாடலை சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது.

தானியங்கி கார்களுக்கு உள்ளதை போன்ற நுட்பத்தையே பறக்கும் கார்களும் பெறும் வாய்ப்புகள் இருந்தாலும் வான்வெளியில் பறக்கும்பொழுது மிக சிறப்பான நவீன கருவிகள் மற்றும் உயர்தர நுட்பத்தினை உருவாக்குவது மிக அவசியமானதாக இருக்கும்.

Skyways-project

இதுபோன்ற திட்டத்தை சிங்கப்பூர் நாட்டின் டிரேபல் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் இணைந்து ஸ்கைவேஸ் என்ற பெயரில் சரக்கு போக்குவரத்துக்காக 2017 ஆம் ஆண்டின் இறுதிமுதல் ஆளில்லாமல் செயல்படும் பறக்கும் டிரான்களை செயல்படுத்த உள்ளது.

அடுத்த 10 வருடங்களுக்கு பிறகு பறக்கும் தானியங்கி கார் நகரங்களை ஆக்கரமிக்க தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.