பிஎம்டபிள்யூ கார்களின் விலை 2% உயர்வு

வருகின்ற ஏப்ரல் 1ந் தேதி முதல் பிஎம்டபிள்யூ மற்றும் மினி பிராண்டுகளின் கார்கள் விலை சராசரியாக 2 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இரு பிராண்டுகளின் அனைத்து மாடல்களும் விலை உயர்வினை சந்திக்கின்றது.
bmw x5m suv

பிஎம்டபிள்யூ இந்தியா

  • இந்தியாவில் விற்பனையில் செய்யப்படுகின்ற பிஎம்டபிள்யூ குழுமத்தின் மினி மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
  • 2 சதவீதம் வரை விலை உயர்வினை சந்தித்துள்ளது.

இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சார்பாக 41 டீலர்கள் செயல்பட்டு வருகின்ற நிலையில் பிஎம்டபிள்யூ 1 சீரிஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் டூரீஸ்மோ, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், பிஎம்டபிள்யூ X1, பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் X3 மற்றும் பிஎம்டபிள்யூ  X5.

மேலும் பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கிரான் கூபே, பிஎம்டபிள்யூ X6, பிஎம்டபிள்யூ Z4, பிஎம்டபிள்யூ M3 செடான், பிஎம்டபிள்யூ M4 கூபே, பிஎம்டபிள்யூ M5 செடான், பிஎம்டபிள்யூ M6 கிரான் கூபே, பிஎம்டபிள்யூ X5 M, பிஎம்டபிள்யூ  X6 M மற்றும் பிஎம்டபிள்யூ i8 போன்ற மாடல்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

பிஎம்டபிள்யூ குழுமத்தின்அங்கமாக செயல்படுகின்ற மினி பிராண்டில் மினி 3 டோர், மினி 5-டோர், மினி கன்வெர்டிபிள், மனி கன்ட்ரிமேன் மற்றும் மினி கிளப்மேன் போன்றவைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

mini countryman

விலை விபரத்துக்கு எவ்விதமான அதிகார்வப்பூர்வ காரணமும் குறிப்பிடபடாமல் விலை 2 சதவீதம் உயர்வினை அறிவித்துள்ளது.