பிரிட்டன் ஆட்டோ நிறுவனங்கள் பாதிக்குமா ? : Brexit

ஐரோப்பியா நாடுகளின் கூட்டமைப்பில் இருந்த முக்கிய நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து வெளியேறுவதனால் பெரும்பாலான துறைகள் சரிவினை சந்திக்க தொடங்கியுள்ளது. பிரிட்டன் நாட்டை மையமாக கொண்டு செயல்படும்  நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களும் புதிய விதிகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

brexit-uk

Brexit :

1953 முதல் தொடங்கி ஐரோப்பியா ஒன்றியத்தில் பிரிட்டன் 1973 ஆம் ஆண்டு வாக்கில் இணைந்தது. மொத்தம் 28 நாடுகள் கொண்ட ஐரோப்பியா குழுவில் பங்கேற்ற நாடுகளுக்குள் வணிகரிதியான பரிமாற்றங்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு எவ்விதமான தடையும் இல்லாமல் இந்த நாடுகளில் பயணிக்கும் வகையில் இருந்து வரும் நிலையில் முதல் பிரிவினை பிரிட்டன் தொடங்கியுள்ளதால் அடுத்தடுத்து சில நாடுகள் பிரியலாம் என கூறப்பட்டாலும் , மற்ற நாட்டு தலைவர்கள் ஒன்றுகூடி பேசி தொடர்ந்து ஐரோப்பியா ஒன்றியத்தில் இணைந்து செயல்பட திட்டமிட்டு வருகின்றன.

தங்களின் தனிப்பட்ட அடையாளம் மற்றும் பூர்வீக இங்கிலாந்து மக்களின் வாழ்வாதாரத்தை மையமாக கொண்டே இந்த முடிவினை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பொது வாக்கெடுப்பில் கிடைத்த வாக்குகுள் சதவீதம் ஐரோப்பியா ஒன்றிய பிரிவுக்கு பெரிய அளவிலான வித்தியாசம் இல்லையென்றாலும் மக்களின் பெரும்பான்மையான விருப்பம் ஒன்றியத்திலிருந்து விலகுவதாக இருந்தால் இங்கிலாந்து பிரதமர் டேவிட்  கேமரூன் வாக்கெடுப்பற்கு முன்னதாக தெரிவித்திருந்த நிலையில் தற்பொழுது விரைவில் டேவிட்  கேமரூன் பதவி விலக உள்ளார்.

ஆட்டோ நிறுவனங்கள் பாதிக்குமா ?

ஐரோப்பியா ஒன்றியத்தில் முதல் பிரிவு தொடங்கி உள்ள நிலையில் பிரிட்டன் ஆட்டோ நிறுவனங்கள் தயாரிப்பில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்  80 சதவீத வாகனங்களில் 57.5 சதவீத வாகனங்கள் ஐரோப்பியா ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

 

brexit-uk-auto

மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இலகுரக வாகனங்களில் 90 சதவீதத்தில் 80 சதவீத வாகனங்கள் ஐரோப்பியா ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றது. மிகப்பெரிய அளவிலான இழப்பினை ஜெர்மனி சந்திக்க உள்ளது. மேலும் இங்கிலாந்து நாட்டின் முக்கிய தயாரிப்பாளர்களான ஜாகுவார் லேண்ட்ரோவர் , நிசான் , மினி ,  டொயோட்டா போன்ற நிறுவனங்கள் பாதிப்பினை சந்திக்கும்.

brexit-uk-smmt

 

இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு ?

இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு நேரடியான எந்த பாதிப்புகளும் இல்லை. ஆனால் முதலீட்டாளர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் சில பாதிப்புகளை சந்திக்கும்.

இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் அங்கமான ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் முக்கிய ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான ஐரோப்பிய ஒன்றியங்களில் சிறப்பாக செயல்பட முடியாத நிலைக்கு சென்றுள்ளதால் இழப்பீட்டை சந்திக்க தொடங்கும்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா ஏற்படுத்தியுள்ள ஃபிரீடேரேட் ஒப்பந்தத்தின் வாயிலாக பிரிட்டன் பங்கேற்க முடியாத நிலையால் புதிய வரி மற்றும் கொள்கைகளை பிரிட்டன் வெளியிட உள்ளதால் அதற்கு ஏற்ப ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட உள்ளது.

brexit-uk-smmt-production

கட்டுரை பற்றி கருத்துகளை மறக்காமல் பதிவு செய்யுங்கள்…