வருகின்ற ஜனவரி 2017 முதல் இந்தியாவின் போக்ஸ்வேகன் நிறுவனம் தங்களுடைய அனைத்து கார் மாடல்களின் விலையும் 3 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் எமியோ காரின் விலையும் உயர்த்தப்பட உள்ளது.
உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் குழுமமாக விளங்கும் போக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் போலோ , வென்ட்டோ ,எமியோ ,ஜெட்டா , போலோ ஜிடி , பெர்ஃபாமென்ஸ்ரக போலோ ஜிடிஐ மற்றும் பாரம்பரியமிக்க பீட்டல் போன்ற கார்களை விற்பனை செய்து வருகின்றது.
உயர்ந்து வரும் உற்பத்தி செலவீனங்கள் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் சரிவு போன்ற காரணங்களால் தங்களுடைய அனைத்து மாடல்களின் விலையும் 3 சதவீதம் வரை உயர்த்துவதனை உறுதிசெய்துள்ளது.
சமீபத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகம் செய்த எமியோ காம்பேக்ட் செடான் ரக கார் அமோக வரவேற்பினை பெற்று விளங்குகின்றது. மேலும் ரூ.26 லட்சத்தில் பெர்ஃபாமென்ஸ் ரக போலோ ஜிடிஐ மாடலை அறிமுகம் செய்துள்ளது.
டொயோட்டா ,டாடா மோட்டார்ஸ் , ரெனால்ட் ,நிசான் , டட்சன் மற்றும் ஹூண்டாய் போன்ற நிறுவனங்களும் தங்களுடைய கார் மாடல்களின் விலையை 2017 உயர்த்த உள்ளதை முன்பே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.