மாருதி எஸ்-க்ராஸ் பேஸ்லிப்ட் படங்கள் வெளியானது

0

மேம்படுத்தப்பட்ட புதிய மாருதி சுஸூகி எஸ்-க்ராஸ் க்ராஸ்ஓவர் ரக மாடல் ஹங்கேரி நாட்டில் வெளியாக உள்ள நிலையில் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. பேஸ்லிப்ட் மாருதி எஸ்-க்ராஸ் தோற்ற பொலிவில் சிறப்பான வெளிப்பாடினை பெற்றுள்ளது. 2016 பாரீஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்படலாம்

Suzuki-S-Cross

Google News

போட்டியாளர்களுடன் ஈடுகொடுக்கும் வகையில் கம்பீரமான தோற்ற அமைப்பினை வெளிப்படுத்தும் வகையில் முன்பக்க ரேடியேட்டர் கிரில் செங்குத்தான ஸ்லாட்டில் மிக அகலமாக பெரிதாக பெற்று கூடுதலான ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகின்றது. மேலும் புதிய புராஜெக்டர் ஹெட்லைட் , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் , புதிய ஸ்டைலில் அலாய் வீல் போன்ற வெளிதோற்ற மாற்றங்களை கண்டுள்ளது.

எஸ்-க்ராஸ் காரின் உட்புறத்தில் டேஸ்போர்டு , இருக்கை , இன்டிரியர் அமைப்பு முழுவதும் சிறிய அளவிலான மேம்பாடுகளை பெற்று புதிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்றுள்ளது.

Suzuki-S-Cross-Facelift-Interiors

என்ஜின்ஆற்றலில் எந்த மாற்றங்களும் இல்லை என தெரிகின்றது. சர்வதேச அளவில் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் விற்பனையில் உள்ளது. மேலும் கூடுதலாக 1.4லிட்டர் பூஸ்டர்ஜெட் என்ஜின் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் 1.3 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கின்றது. மேலும் புதிய மாருதி எஸ்-க்ராஸ் பேஸ்லிப்ட் மாடலுடன் பெட்ரோல் ஆப்ஷன் இடம்பெறலாம்.

Maruti-S-Cross-facelift

Suzuki-S-Cross-Front

 

Suzuki-S-Cross-Facelift-Rear

படங்கள்உதவி ; csiszigram