செடான் கார் பிரிவில் முதன்மையாக விளங்கும் மாருதி டிசையருக்கு கடுமையான சவாலை ஹோண்டா அமேஸ் கொடுத்துள்ளது. இதனால் டிசையர் காருக்கு மிகப் பெரிய சவால் ஏற்ப்பட்டுள்ளது.
அமேஸ் செடான் காரின் மைலேஜ் மிக அதிகப்படியான இடவசதி மற்றும் சிறப்பம்சங்கள் மேலும் டிசையர் காரின் விலையை ஒட்டியோ அமேஸ் விலை ஆகியவை அமேஸ் காரின் வரவேற்ப்புக்கு முக்கிய காரணியாகும்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் 4852 அமேஸ் காரை விற்பனை செய்துள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 70 % பங்கினை அமேஸ் வகிக்கின்றது. இதன் விற்பனை வேகம் தொடர்ந்தால் டிசையர் சரிவினை சந்திக்குமா ?
அறிமுகம் செய்து ஒரு மாதம்கூட நிறைவுபெறுவதற்க்கு முன் 22,000 முன்பதிவுகளை கடந்துள்ளது. இது டிசையரின் வரவேற்ப்பிற்க்கு இனையானதாகும்.
5 வருடமாக சந்தையில் உள்ள டிசையர் மிக வழுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. பலதரப்பட்ட இந்திய மக்களின் மிக நன்மதிப்பினை பெற்ற காராகவும் டிசையர் விளங்குவதால் அமேஸ் மிக கடுமையான சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மாருதி டிசையர் ஏப்ரல் மாதத்தில் 19,446 கார்கள் விற்றுள்ளது. இது கடந்த ஏப்ரல் 2012யை விட 25.38% உயர்ந்துள்ளது. அதாவது 15,510 கார்களை விற்றது.
மாதம் 5000 அமேஸ் கார்களை மட்டுமே தயாரிக்கும் நிலையில் ஹோண்டா உள்ளது. வரும்காலங்களில் இதனை இரட்டிப்பாக்க உள்ளது. மிக அதிகமாகவே டீசல் மாடல்களுக்கே முன்பதிவு வருகின்றதாம். இதனால் காத்திருப்பு காலம் அதிகமாகின்றது. பெட்ரோல் மாடல்களுக்கு 4 முதல் 5 வாரங்களிலும் டீசல் மாடல்களுக்கு 12 வாரங்கள் வரை காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்படலாம்.
டிசையர் தன்னை சுறுசுறுப்பாக்கி கொள்ள டிசையர் ரீகல் என்ற பெயரில் வரையறுக்கப்பட்ட பதிப்பினை வெளியிட்டுள்ளது. மேலும் டிரைவ் ராலி என்ற பெயரில் மைலேஜிற்க்கான போட்டியினை நடத்தியது. மேலும் பல சலுகைகளை அறிவித்துள்ளது.
இனி வாடிக்கையாளர்களின் கருத்தில்தான் ஹோண்டா அமேஸ் காரின் வளர்ச்சி உள்ளது. நல்ல சிறப்பான மதிப்பினை வாடிக்கையாளர் மத்தியில் அமேஸ் பெற்றால் டிசையரை புதுப்பிக்க வேண்டிய நிலைக்கு மாருதி தள்ளப்படும்.
வெல்லுமா அமேஸ் உங்கள் கருத்தினை பதிவு செய்யுங்கள்….