2017 ஏப்ரல் 1ந் தேதி முட்டாள்கள் தினத்தை கொண்டாடும் வகையில் மோட்டார் உலகில் வெளியான சுவாரஸ்ய படங்கள் மற்றும் தகவல்களை இங்கே காணலாம்.

மோட்டார் உலகம்

ஏப்ரல் 1ந் தேதி மோட்டார் உலகில் வெளியான சில சவாரஸ்யமான முட்டாள்கள் தின கொண்டாட படங்கள் மற்றும் தகவல்களில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த சிலவற்றை பார்க்கலாம்…

ட்ரையம்ப் ஸ்டீயரிங் வீல் பைக்

ட்ரையம்ப் வெளியிட்ட ட்ரையம்ப் ஹைன்டில்வீல் கொண்ட மோட்டார்சைக்கிள் கான்செப்ட் மாடலின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 260மிமீ விட்டம் கொண்டுள்ள இந்த ஸ்டீயரிங் வீலை கொண்டு இரு சக்கர வாகனங்களை இயக்க முடியாது.

ஹூண்டாய் கிளிக் டூ ஃபிளை

கார்களின் டெலிவரியை ட்ரோன்கள் வாயிலாக செய்வதாக செய்தி வெளியிட்டு ஒரு வீடியோவினை ஹூண்டாய் பிரிட்டன் வெளியிட்ட வீடியோ வைரலானது . அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மெக்லாரன் இறகு கார்

மெக்லாரன் வெளிப்படுத்திய முட்டாள்கள் தின சிறப்பு கார் படமாக புறா இறகுகளை போன்ற 10,000 கார்பன் இறகுகளை கொண்டு அலங்கரிக்கப்பட்ட மாடலை வெளியிட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ டிடிரைவ் டாக் பாஸ்கட்

பிஎம்டபிள்யூ வெளியிட்ட 4 சக்கரங்களை கொண்ட நாய்களுக்கான சிறப்பு கூடை போன்ற அமைப்பினை கொண்ட Dடிரைவ் டாக் பாஸ்கட் மாடல் இதோ..!

லெக்சஸ் லேன் வாலட்

லெக்சஸ் வெளியிட்ட லேன் வாலட் டெக்னாலஜி நுட்பம், முன்னே மிக மெதுவாக செல்லும் வாகனத்தை லேனில் இருந்து மாற்றிவிட்டு அந்த காரை ஒவர்டேக் செய்யும் கார் நுட்ப வீடியோ வெளியாகியுள்ளது.

மேன் ஐஸ்க்ரீம் வேன்

ஐஸ்மேன் வேன் என்ற பெயரில் ஒரு நாள் சலுகையாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த வேன் உருகி கரைந்து விடும்.

ஹோண்டா ஹார்ன் எமோஜி

எமோஜி போன்ற பொத்தன்களை கொண்ட ஹோண்டா ஹார்ன் எமோஜி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.