2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் யூஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் ரெனிகேட் வரிசை பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அடுத்த சில வாரங்களில் 25 டீலர்களை நாடு முழுவதும் நியமிக்க உள்ளது.
ஏப்ரல் மத்தியில் டீலர்களை தொடங்க உள்ள யூஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதனை தொடர்ந்து ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பைக்குகளை டெலிவரி செய்ய உள்ளது. தற்பொழுது ரெனிகேட் கிளாசிக் , ரெனிகேட் கமாண்டோ , ரெனிகேட் ஸ்போர்ட் S என மொத்தம் 3 யூஎம் ரெனேகேட் சீரிஸ் பைக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது.
யூஎம் மோட்டார்சைக்கிள் விலை பட்டியல்
- யூஎம் ரெனிகேட் கிளாசிக் – ரூ. 1.69 லட்சம்
- யூஎம் ரெனிகேட் கமாண்டோ – ரூ.1.59 லட்சம்
- யூஎம் ரெனிகேட் ஸ்போர்ட் எஸ் – ரூ. 1.49 லட்சம்
{ அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை }
மூன்று மாடல்களிலும் 25 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 279சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 27.8 Nm ஆகும். இதில் 6 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.
ராயல் என்ஃபீல்டு பைக்குளுக்கு நேரடியான போட்டியாக வந்துள்ள ரெனிகேட் பைக்குகள் மிகுந்த சவாலினை ஏற்படுத்த உள்ளது. தமிழகத்தில் சென்னை , கோவை மற்றும் மதுரை என மூன்று நகரங்களில் தன் சேவை மையங்களை தொடங்க உள்ளது.