யூஎம் எதிர்கால பைக் மாடல்கள்

0

யூஎம் மோட்டடார்சைக்கிள் நிறுவனம் இரண்டு புதிய பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. லோகி ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்காவின் யூஎம் மோட்டார்சைக்கிள் செயல்படுகின்றது.

um-renegade-commando-bike

Google News

இந்தியாவில் முதன்முறையாக 2016 ஆட்டோ எக்ஸ்போ ஷோ அரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட யூஎம் ரெனேகேட் சீரிஸ் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து நடைபெற்ற முன்பதிவு வாயிலாக சுமார் 3000 ஆர்டர்களை பெற்றுள்ளது. அடுத்த சில வாரங்களில் டெலிவரி செய்யும் நோக்கில் உள்ளது.

யூஎம் இந்தியா இயக்குனர் ராஜீவ் மஸ்ரா பிடிஐ-க்கு அளித்துள்ள பேட்டியில் 3000 ஆர்டர்களை பெற்றுள்ள யூஎம் ரெனிகேட் கமென்டோ மற்றும் ரெனிகேட் ஸ்போர்ட்ஸ் பைக்குகள் அடுத்த வாரத்தில் டெலிவரி தொடங்கப்பட உள்ளது. மேலும் ரூ.1.79 லட்சத்தில் விற்பனைக்கு வந்த யூஎம் ரெனேகேட் கிளாசிக் பைக் வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக முன்பதிவு தொடங்கப்பட உள்ளது.

um-renegade-sport-s

இந்த நிதி வருடத்தில் 200சிசி மற்றும் 400சிசி என இரு பிரிவுகளிலும் தலா ஒரு மோட்டார்சைக்கிள் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மாடல்கள் குறித்த எந்த விபரங்களும் வெளியிடப்பட வில்லை. 200சிசி பிரிவில் வெளிவரவுள்ள பஜாஜ்  அவென்ஜர் க்ருஸர் மற்றும் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் போன்றவற்றுக்கு நெருக்கடியை தரும் வகையில் அமையும்.

யூஎம் ஸ்கூட்டர்

யூஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் வளர்ந்து வரும் ஸ்கூட்டர் சந்தையில் காலபதிக்க திட்டமிட்டு வருகின்றது.  தற்பொழுது பிளாஷ் (110சிசி) , பவர்மேக்ஸ் (125சிசி) மற்றும் மேட்ரிக்ஸ் (150சிசி) போன்றவை யூஎம் நிறுவனத்தின் வசம் உள்ள மாடல்களாகும். அடுத்த சில வருடங்களில் ஸ்கூட்டர் சந்தையிலும் நுழைய திட்டமிட்டுள்ளது.

யூஎம் மற்றும் லோகி ஆட்டோ கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள ஜார்கன்ட் மாநிலத்தில் அமைந்துள்ள காசிபூர் ஆலையின் வாயிலாக ஆண்டுக்கு 50,000 இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறனை கொண்டதாக அமைந்துள்ள ஆலையின் வாயிலாக விற்பனை அதிகரிக்கும் பொழுது  ஆண்டுக்கு 1 லட்சம் இருசக்கர வாகனங்கள் தயாரிக்க முடியும்.  தற்பொழுது 30 சதவீத பாகங்கள் மட்டுமே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டு வருகின்றது. அடுத்த சில வருடங்களில் 100 சதவீத பாகங்களும் உள்நாட்டிலே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.