ரூ.3.04 லட்சம் விலை சரிந்த செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி

0

ஜிஎம் செவர்லே நிறுவனத்தின் முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படும் செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி காரின் விலை பண்டிகை காலத்தை ஒட்டி ரூ.3.04 லட்சம் சரிந்து ரூ. 23.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் கிடைக்க தொடங்கியுள்ளது.

ஃபார்ச்சூனர் மற்றும் எண்டேவர் போன்ற எஸ்யூவிகளுக்கு நேரடி போட்டியாகவும் மற்ற எஸ்யூவிகளான சேங்யாங் ரெக்ஸ்டான், பஜெரோ ஸ்போர்ட் ,  மற்றும் இசுசூ எம்யூ-7  போன்ற மாடல்களுடன் போட்டியாக அமைந்துள்ள ட்ரெயில்பிளேசர் கடந்த அக்டோபர் 2015ல் ரூ.  26.99 லட்சம் விலையில் டாப் LTZ  வேரியன்டில் மட்டுமே விற்பனைக்கு வெளியானது.

Google News

200 HP ஆற்றலுடன் 500 Nm இழுவைதிறனை பெற்றுள்ளள 2.8 லிட்டர் டியூரோமேக்ஸ் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

போட்டியாளர்களை விட கூடுதல் விலை மற்றும் ஒற்றை வேரியன்ட் போன்ற காரணங்களால் பெரிதும் வாடிக்கையாளர்களை கவராத நிலையிலே ட்ரெயில்பிளேசர் இருந்து வருகின்றது. கடந்த ஜனவரி – ஆகஸ்ட் 2016 வரையிலான காலகட்டத்தில் வெறும் 48 அலகுகள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது. போட்டியாளரான எண்டேவர் சராசரியாக மாதம் 500 அலகுகள் விற்பனை ஆகி வருகின்றது. அதிரடியாக தற்பொழுது விலை குறைக்கப்பட்டுள்ளதால் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.