ரூ.8000 வரை டாடா டியாகோ கார் விலை உயர்வு

டாடா மோட்டார்சின் பிரசத்தி பெற்ற டாடா டியாகோ கார் விலை ரூ.8000 வரை அதிகபட்சமாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. டியாகோ காரின் பேஸ் வேரியண்ட் மாடலின் விலையில் எந்த மாற்றங்களும் இல்லை.

tata-tiago

விற்பனைக்கு வந்த சில வாரங்களிலே 30,000 முன்பதிவுகளை பெற்று டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு புதிய உற்சாகத்தை வழங்கியுள்ள டியாகோ காருக்கான காத்திருப்பு காலம் இரண்டு மாதங்கள் வரை அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பயணிகள் கார் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் பெரிதாக விற்பனையை பதிவு செய்யாத நிலையில் டியாகோ நல்லதொரு தொடக்கத்தை டாடா நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.

டாடா சனந்த ஆலையில் கூடுதலாக உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதால் காத்திருப்பு காலம் வெகுவாக குறையும் என டாடா செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

69 bhp ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8 bhp மற்றும் டார்க் 114 Nn ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா டியாகோ கார் விலை பட்டியல்

டியாகோ பெட்ரோல் விலை

வேரியண்ட் புதிய விலை (ரூ.) பழையவிலை (ரூ.) வித்தியாசம் (ரூ.)
 XB   3.30 லட்சம்  3.30 லட்சம்  —இல்லை—
XE  3.77 லட்சம் 3.70 லட்சம்  7000
XM 4.03 லட்சம் 3.96 லட்சம் 7000
XT 4.34 லட்சம்  4.26 லட்சம் 8000
XZ  4.90 லட்சம் 4.83 லட்சம்   7000

டியாகோ டீசல் விலை

வேரியண்ட் புதிய விலை (ரூ.) பழையவிலை (ரூ.) வித்தியாசம் (ரூ.)
 XB   4.07 லட்சம்  4.07 லட்சம்  —இல்லை—
XE  4.48 லட்சம் 4.41 லட்சம்  7000
XM 4.84 லட்சம் 4.77 லட்சம் 7000
XT 5.15 லட்சம்  5.08 லட்சம் 7000
XZ  5.71 லட்சம் 5.63 லட்சம்   8000

(அனைத்தும் எக்ஸ்ஷோரூம் சென்னை விலை )