ரெனோ க்விட் கார் மிக சவாலான விலையில் வந்துள்ளதால் தனது போட்டியாளர்களுக்கு மிகுந்த நெருக்கடி தந்துள்ளது. க்விட் காரின் வேரியண்ட் விபரம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
ரெனோ க்விட் கார் |
ரூ.2.69 லட்சத்தில் தொடங்கும் ரெனோ க்விட் காரில் 53.2பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 800சிசி பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 72என்எம் ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.
நேர்த்தியான வடிவமைப்பில் விளங்கும் ரெனால்ட் க்விட் கார் 5 விதமான வண்ணங்களில் ஓட்டுநருக்கான காற்றுப்பை டாப் மாடலில் ஆப்ஷனலாக பெற்றுள்ளது.
ஸ்டான்டர்டு , RXE , RXL RXT , 4 விதமான வேரியண்டிலும் கூடுதலாக இரண்டு ஆப்ஷனல் ( RXE(O) , RXT (O) ) வேரியண்ட்களையும் பெற்றுள்ளது.
ரெனோ க்விட் வேரியண்ட் விபரம்
ரெனோ க்விட் ஸ்டான்டார்டு
க்விட் பேஸ் வேரியண்டில்
- கருப்பு நிற பம்பர்
- ஸ்டீல் வீல் மற்றும் ஸ்பேர் வீல்
- ஒற்றை வண்ண டேஸ்போர்டு
- கிரே அப்ஹோல்ஸ்ட்ரி
- ஹீட்டர் (ஏசி இல்லை)
- 2 வருட துருபிடிக்காமல் இருக்கும் என்பதற்க்கான வாரண்டி
- கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர்
- உட்புற பூட் ரிலீஸ்
- மெனுவல் ஸ்டீயரிங்
ரெனோ க்விட் RXE
- சில்வர் வண்ணம் கொண்ட ஸ்டீல் வீல்
- பயணிகளுக்கான சன் வைசர்
- என்ஜின் இம்மொபைல்சர்
- ஏசி மற்றும் ஹீட்டர்
- ஆடியோ தொடர்பு வசதிகள் ஆப்ஷனலாக பெறலாம் ( RXE (O) )
ரெனோ கிவிட் RXL
- பாடி வண்ணத்தில் பம்பர்
- ஆடியோ வசதிகள்
- எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங்
- கருப்பு மற்றும் சிவப்பு வண்ணம் கலந்த அப்ஹோல்ஸ்டரி
- பிரிமியம் முன்பக்க இருக்கைகள்
- ஆட்டோ ஆன்/ஆஃப் கேபின் விளக்கு
ரெனால்ட் க்விட் RXT
- இரட்டை வண்ண டேஸ்போர்டு
- ஏசி நாப்களில் குரோம் பூச்சூ
- ஓட்டுநருக்கான காற்றுப்பைகள் ஆப்ஷனல் ( RXT (O) )
- முன்பக்க பவர் வின்டோஸ்
- மீடியா நேவ் பேக்
- ரிமோட் கீலெஸ் என்ட்ரி மற்றும் சென்ட்ரல் லாக்கிங்
- முன்பக்க பனி விளக்குகள்
மேலும் படிக்க ; ரெனோ க்விட் விலை விபரம்
RXE (O) வேரியண்டில் RXE வேரியண்டில் இருந்து கூடுதலாக ரேடியோ ஆப்ஷன் மட்டும் இருக்கும். RXT (O) வேரியண்டில் RXT வேரியண்டில் இருந்து கூடுதலாக ஓட்டுநருக்கான காற்றுப்பைகள் மட்டும் இருக்கும். ரெனோ க்விட் காருக்கு 2 வருடம் அல்லது 50,000கிமீ வரை வாரண்டி உள்ளது.
Renault Kwid variants details