இங்கிலாந்தின் லேன்ட் ரோவர்(LAND ROVER) நிறுவனத்தினை சில ஆண்டுகளுக்கு முன் டாடா நிறுவனம் தனதாக்கிக் கொண்டது. இந்தியாவில் லேன்ட் ரோவர் நிறுவனத்திற்க்கென தனியான உற்பத்தி ஆலை கிடையாது. அதனால் முழுவதும் இங்கிலாந்தில் உற்பத்தி செய்த கார்கள் கடல் மார்க்கமாக இந்தியா வருகிறது. எனவே விலை கூடுதல்தான்.
2013 ரேஞ்ச் ரோவர் சில மாதங்களுக்கு முன்தான் லன்டனில் அறிமுகம் செய்தனர். இந்தியாவில் வருகிற நவம்பர் 30 அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரேஞ்ச் ரோவர்(RANGE ROVER) நான்காவது தலைமுறை மிகச் சிறப்பான வசதிகளில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
2013 ரேஞ்ச் ரோவர்(RANGE ROVER) 3 வகைகளில் வந்துள்ளது.
- 5.0 லிட்டர் (supercharged) பெட்ரோல் என்ஜின் பொருத்துப்பட்டுள்ளது.
- 4.4 லிட்டர் TDV8(turbocharged) டீசல் என்ஜின் பொருத்துப்பட்டுள்ளது.
- 3.0 லிட்டர் V6(turbo) டீசல் என்ஜின் பொருத்துப்பட்டுள்ளது.
விலை; 1.70 கோடி இருக்கலாம்..