Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக் வாங்கலாமா ?

By MR.Durai
Last updated: 12,December 2015
Share
SHARE

புதிய ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக் ரூ.89,872 சென்னை ஆன்ரோடு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கின் சிறப்புகள் என்ன ? ஹார்னெட் 160ஆர் பைக்கினை வாங்கலாமா ? என்பதனை தெரிந்துகொள்ளுவோம்.

சிபி யூனிகார்ன் 160 பைக்கிற்கு மேலாக நிலை நிறுத்தப்பட்டுள்ள சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கில் என்ஜின் முதல் பெரும்பாலான பாகங்கள் சிபி யூனிகார்ன் 160 பைக்கில் இருந்தே பெறப்பட்டுள்ளது. ஸ்போர்ட்டிவ் பைக் தோற்றத்தில் விளங்கும் ஹார்னெட் பைக் ஆற்றல் 15.7 பிஹெச்பி ஆற்றலை வழங்குகின்றது.

Contents
  • ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர்
  • என்ஜின்

ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர்

மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் தோற்றத்துடன் விளங்கும் ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கின் முகப்பு விளக்கு கூர்மையாகவும் ஸ்டைலிசாகவும் உள்ளது. இதன் பக்கவாட்டில் சிறப்பாக அமைய பெற்றுள்ள டேங்க் ஃபிளேங் மற்றும் மல்டி ஸ்போக் அலாய் வீல் பின்புறத்தில் X  வடிவ டெயில் எல்இடி விளக்கினை பெற்றுள்ளது. ஆரஞ்ச் , வெள்ளை , நீலம் , சிவப்பு மற்றும் கருப்பு என 5 விதமான வண்ணங்களில் கிடைக்கின்றது.

என்ஜின்

சிபி யூனிகார்ன் 160 பைக்கில் பொருத்தப்பட்டிருந்த அதே என்ஜினை சிபி ஹார்னெட் 160ஆர் பைக் பெற்றிருந்தாலும் ஆற்றல் 15.7 பிஹெச்பி வெளிப்படுத்துகின்றது. இதன் டார்க் 14.76 என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.  சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 58.95 கிமீ ஆகும்.

CB Hornet 160R Specifications

என்ஜின் 162.71 சிசி
ஆற்றல்  15.7 பிஹெச்பி @ 8500 rpm
டார்க்  14.76 என்எம் @ 6500 rpm
கியர்பாக்ஸ்  5 வேகம் – 1-N-2-3-4-5
மைலேஜ்  58.95 Kmpl (ARAI)
டாப் ஸ்பீடு 110கிமீ
 நீxஅxஉ 2041X783X1067 மிமீ
டேங்க்  12 லிட்டர்
வீல்பேஸ்  1345மிமீ
கிரவுண்ட் கிளியரன்ஸ்  164மிமீ
முன் டயர்  100/80-17
பின் டயர் 140/70-17
முன் பிரேக்  டிஸ்க் 276மிமீ
பின் பிரேக்  டிரம் 130 மிமீ / டிஸ்க் 220மிமீ
முன் சஸ்பென்ஷன்  டெலிஸ்கோபிக்
பின் சஸ்பென்ஷன்   மோனோசாக்

பிரேக்

முன்புறத்தில்  276மிமீ டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் டிரம் 130மிமீ பிரேக் மற்றும் 220மிமீ டிஸ்க் என இரண்டு ஆப்ஷனில் கிடைக்கின்றது. இவற்றில் டிஸ்க் பிரேக் ஆப்ஷனில் சிபிஎஸ் எனப்படும் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தினை பெற்றுள்ளது. இதன் மூலம் சிறப்பான பிரேக்கிங் திறனை வெளிப்படுத்தும்.

சஸ்பென்ஷன்

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குள் மற்றும் பின்புறத்தில் மோனோசாக் அப்சார்பரை பெற்றுள்ளது.

போட்டியாளர்கள்

ஜிக்ஸெர் , பல்சர் 150 , ஹங்க் , யமஹா FZ  போன்ற மாடல்களுடன் போட்டியை ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் பைக் எதிர்கொள்ளுகின்றது.

ஹோண்டா சிபி ஹார்னெட் 160R பைக் விலை

ஹோண்டா சிபி ஹார்னெட் 160R டிரம் – ரூ.89,872

ஹோண்டா சிபி ஹார்னெட் 160R டிஸ்க் சிபிஎஸ் – ரூ.94,785

{அனைத்தும் சென்னை ஆன்ரோடு விலை விபரம் }

ஹோண்டா சிபி ஹார்னெட் 160R  பைக் வாங்கலாமா ?

ஹோண்டா சிபி ஹார்னெட் 160R பைக் தனது போட்டியார்களை விட சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய பைக்காக விளங்குகின்றது. டிரம் பிரேக் மாடலை விட டிஸ்க் மற்றும் சிபிஎஸ் ஆப்ஷன் ரூ.5000 வரை கூடுதலாக உள்ளது. மேலும் 160சிசி பிரிவில் சிறந்து விளங்கும் ஜிக்ஸெர் பைக்கை விட ரூ.5,000 வரை விலை அதிகமாக உள்ளது. யமஹா FZ-S பைக்கிற்கு இனையான விலையில் தான் உள்ளது.  விலையை தவிர ஆற்றல் ஹோண்டாவின் தரம் போன்றவை சிபி ஹார்னெட் 160R பைக்கின் பலமாக விளங்கும்.

[envira-gallery id=”4234″]

Honda CB Hornet 160R bike spec details and Chennai onroad price

 

renault lodgy
2022க்கு முந்தைய ரெனால்ட் வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்றதல்ல.!
350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?
நியோ ஹைரேஞ்ச் எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை வெளியிட்ட ஆய்லர் மோட்டார்
வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்
BE6 பேட்மேன் 999 யூனிட்டுகளை விற்று தீர்த்த மஹிந்திரா
TAGGED:Honda Bike
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
honda qc1 e scooters
Honda Bikes
ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 honda shine 100 obd-2b
Honda Bikes
ஹோண்டா ஷைன் 100 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
2025 ஹோண்டா எஸ்பி 160
Honda Bikes
2025 ஹோண்டா SP160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
Bajaj Freedom 125 cng
Bajaj
பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் விலை, மைலேஜ், சிறப்பு அம்சங்கள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms