ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் கலவையில் உருவான ஹோண்டா நவி இளம் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதால் ஆண்டுக்கு 1 லட்சம் நவி மோட்டோ ஸ்கூட்டர் விற்பனை செய்யும் நோக்கில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரசத்தி பெற்ற ஆக்டிவா ஸ்கூட்டரின் 110சிசி இஞ்ஜின் பொருத்தப்பட்ட நவி ஹோண்டா இந்தியா பிரிவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவால் வடிவமைக்கப்பட்டு முதன்முறையாக டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதிகப்படியான எதிர்பார்ப்பு இல்லாமால் ஹோண்டா நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட நவி மிக விரைவாக 15,000 பைக்குகள் விற்பனை ஆகியுள்ளது. தற்பொழுது முன்பதிவு அதிகரித்து வருவதனால் ஹோண்டா ராஜஸ்தான் ஆலையில் உற்பத்தி இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
நவி இஞ்ஜின்
நவி பைக்கில் 7.8bhp ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 109.2cc என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஆக்டிவா ஸ்கூட்டரில் உள்ள அதே HET என்ஜினாகும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நீளம் 1854மிமீ , அகலம் 748மிமீ மற்றும் உயரம் 1039மிமீ ஆகும். மிக இலகுகுவான எடை கொண்ட 101 கிலோ மட்டுமே கொண்டுள்ள நவி மோட்டோ பைக்கில் இருபக்கங்களிலும் டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்க சஸ்பென்ஷன் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்புறம் ஒற்றை சாக் அப்சார்பரை பெற்றுள்ளது.
விற்பனையில் உள்ள ஹோண்டா பைக்குகளில் விலை குறைவான மோட்டோ ஸ்கூட்டராக விளங்கும் நவியில் மேலும் சில மாடல்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 125சிசி இஞ்ஜின் ஆப்ஷன் மற்றும் கூடுதலான ஆற்றல் மற்றும் சுவாரஸ்யமான அனுபவத்தினை வழங்கும் வகையில் மேலும் சில நவி மோட்டோ ஸ்கூட்டர் மாடல்கள் அடுத்த சில வருடங்களில் வரவாய்ப்புகள் உள்ளது.
Honda NAVi photo gallery – Auto Expo 2016
[envira-gallery id=”5902″]