டாடா டியாகோ கார் விமர்சனம்

0

புதிய டாடா டியாகோ கார் மூலம் புதியதொரு ஆரம்பத்தினை தொடங்க உள்ள டாடா மோட்டார்சின் டியாகோ கார் விமர்சனம் பற்றி முக்கிய விபரங்கள் மற்றும் தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

tata tiago

Google News

தன்னுடைய பழைய தவறுகளை முற்றிலும் நீக்கி விட்டு புதிய தொடக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் மிகவும் கவனமாக டாடா மோட்டார்ஸ் வடிவமைத்துள்ள  டியாகோ காரில் நேர்த்தியான டிசைன் ,  பல நவீன அம்சங்கள் , செயல்திறன் மற்றும் பாதுகாப்பு போன்றவைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

மிக கடுமையான சவால்கள் நிறைந்த காம்பேக்ட் ரக ஹேட்ச்பேக் பிரிவில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பினை பெற்று விளங்கும் செலிரியோ , கிராண்ட் ஐ 10 , வேகன் ஆர் ,  பீட் மற்றும் வரவுள்ள சிறியரக கேயூவி100 போன்ற மாடல்களை  டியாகோ எதிர்கொள்ள உள்ளது.

தோற்றம்

டாடாவின்  கைவன்னத்தில் மிக நேர்த்தியான பொலிவுடன் இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிறப்பான தோற்றத்தினை கொண்டுள்ளது.  புதிய டிசைன்நெக்ஸ் தாத்பரியத்தில் உருவாக்கப்பட்டுள்ள  டியாகோ காரில் டாடாவின் புதிய முன்பக்க தேன்கூடு கிரிலுக்கு மத்தியில் அமைந்துள்ள டாடாட லோகோ , பம்பரில் கொடுக்கப்பட்டுள்ள கோடுகள் மற்றும் தேன் கூடு கிரில் , முகப்பு விளக்கினை சுற்றி கருப்பு நிற கிளஸ்ட்டர் , வட்ட வடிவ முன்பக்க பனி விளக்குகள் , ஸ்டைலிங்கான தோற்றத்தில் விளங்கும் ஹெட்லைட் போன்றவை டாடா ஜீக்கா காருக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

tata tiago

 

பக்கவாட்டில் மிக நேர்த்தியான ஸ்டைலிங் சைட் புராஃபைல் கோடுகள் , 14 இஞ்ச் அலாய் வீல் , கைப்பிடிகள் போன்றவை சிறப்பாக அமைய பெற்றுள்ளது.

பின்புறத்தில் மிக நேர்த்தியாக அமைய பெற்ற சரிவான தோறத்த அமைப்பில் உள்ள பின்புற கதவு , பம்பர் டெயில் கேட் விளக்குகள் கவர்ச்சியாக அமைந்து தோற்றத்துக்கு மேலும் வலு சேர்க்கின்றன.

 

  நீளம் 3746 மிமீ
 அகலம்  1647 மிமீ
 உயரம்  1535 மிமீ
 கிரவுண்ட் கிளியரன்ஸ்  170 மிமீ
 வீல் பேஸ்  2400 மிமீ
 பூட் ஸ்பேஸ்  242 லிட்டர்
 எரிபொருள் டேங்க்  14 லிட்டர்

உட்புறம் (இன்டிரியர்)

டாடா கார்களிலே மிக நேர்த்தியாக ஃபிட் மற்றும் ஃபீனிஷ் செய்யப்பட்டுள்ள முதன்மையான காராக  டியாகோ விளங்குகின்றது. ஏசி வென்ட்கள் பாடி வண்ணத்தில் இருப்பது சிறப்பான ஒன்றாகும்.  இரட்டை வண்ணத்தில் மிக நேர்த்தியாக அமைந்துள்ள டேஸ்போர்டில் பல புதிய நவீன அம்சங்களை கொண்டுள்ளது.

Tata-Zica-dashboard

டேஸ்போர்டில் அமைந்துள்ள அறுங்கோண வடிவ கிளஸ்ட்டரில் ஹார்மனால் உருவாக்கப்பட்டுள்ள கனெக்ட்நெக்ஸ்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இதில் பல நவீன வசதிகள் உள்ளன. அவை

 • ஜூக் கார் ஆப்
 • ஸ்மார்ட் போன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் ஆப்
 • பூளூடூத் , யூஎஸ்பி , ஆக்ஸ் தொடர்புகள்
 • ரியர் பார்க்கிங் சென்சார்
 • கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர்
 • குறைவான எரிபொருள் எச்சரிக்கை
 • எரிபொருள் அளவினை பொருத்து எவ்வளவு தூரம் பயணிக்கலாம்

என பல நவீன வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஃபேபரிக் இருக்கைகளுடன் விளங்கும் ஸீகா காரில் உள்ள ஜூக் கார் ஆப் வழியாக காரில் பயணிப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடல்களை கேட்கும் வகையில் ஆண்ட்ராய்டு மொபைல் போன் வழியாக ஹாட்ஸ்பாட் பயன்படுத்தி பெற இயலும்.

குறிப்பிடதக்க வகையில் க்ளோவ் பாக்சில் பென் , கார்டு ஹோல்டர் , சாஃப்ட் டச் ஓபன் , கூல்டு வசதி என பலவற்றை பெற்றுள்ளது. 4 கதவுகளிலும் மொத்தம் 22 விதமான ஸ்டோர்ஜ் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 242 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ஸ்பேஸ் சிறப்பாக உள்ளது.

என்ஜின்

டாடா  டியாகோ காரில் ரெவோட்ரான் மற்றும் புதிய ரெவோடார்க் என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பான செயல்திறன் , இருவிதமான டிரைவிங் மோட் , அதிகப்படியான மைலேஜ் போன்வற்றை தரவல்லதாகும்.

tata-zica-top
டாடா ஸீகா கார்

69பிஹெச்பி ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா போல்ட் , ஸெஸ்ட் கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8பிஹெச்பி மற்றும் டார்க் 114 என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகள்

ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்ற வசதிகளுடன் முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் , சென்ட்ரல் லாக்கிங் , என்ஜின் இம்மொபைல்ஸர்  , வேகத்தினை உணர்ந்து தானாகவே லாக் ஆகும் கதவுகள் போன்றவற்றை பெற்றுள்ளது.

டாடா-ஸீகா

விலை 

டாடா  டியாகோ காரின் விலை ரூ.3.90 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரவாய்ப்புகள் உள்ளது.

டாடா  டியாகோ வாங்கலாமா

ஓட்டுதல் மற்றும் கையாளுதலில் சிறப்பாக உள்ள டாடா  டியாகோ காரில் பல நவீன வசதிகள் பாதுகாப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மிக நேர்த்தியான டிசைன் அம்சங்கள் , ஸ்டைலான தரமான இன்டிரியர்  டியாகோ காரின் பக்கபலமாக உள்ளது.

மிக தரமான மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ள டாடா  டியாகோ காரை தாரளமாக வாங்கலாம்.

டாடா டியாகோ விலை

பெட்ரோல்

 •  Tiago XB – ரூ. 3.30 லட்சம்
 • Tiago XE – ரூ. 3.70 லட்சம்
 •  Tiago XM – ரூ. 3.96 லட்சம்
 • Tiago XT – ரூ. 4.26 லட்சம்
 • Tiago XZ – ரூ. 4.83 லட்சம்

டீசல்

 • Tiago XB – ரூ. 4.06 லட்சம்
 • Tiago XE – ரூ. 4.41 லட்சம்
 • Tiago XM – ரூ. 4.77 லட்சம்
 • Tiago XT – ரூ. 5.08 லட்சம்
 • Tiago XZ – ரூ. 5.63 லட்சம்

{ அனைத்தும் சென்னை எக்ஸ்ஷோரூம் விலை }

[envira-gallery id=”3889″]